மட்டக்களப்பில் சுதந்திரமானதும், நீதியானதுமான தேர்தலுக்கான மக்கள் இயக்கமான கபே அமைப்பினர் சுதந்திரமான தேர்தல் தொடர்பாக நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களுக்கு விழிப்புணர்வு துண்டுபிரசுரம் வழங்கும் நடவடிக்கையை வெள்ளிக்கிழமை(11) கச்சேரியில் ஆரம்பித்து வைத்தனர்.
கபே அமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட இணைப்பாளர் தேசியமானிய ஏ.சி.எம். மீராஸாஹிப் தலைமையில் திடீர் மரணவிசாரணை அதிகாரியும், கபே அமைப்பின் பிரதான கண்காணிப்பாளருமான எம்.நசீர் உள்ளிட்ட கண்காணிப்பாளர்கள் வேட்பு மனு தாக்கல் இறுதி திகதியான வெள்ளிக்கிழமை கச்சேரியில் வேட்பு மனுதாக்கல் செய்யும் காரியலய பகுதிக்கு சென்று அங்கு கண்காணிப்பில் ஈடுபட்டதுடன், வேட்பு மனுதாக்கல் செய்ய வேட்பாளர்களுக்கு நீதியான சுதந்திரமான வன்முறையற்ற தேர்தல் இடம்பெறவேண்டும் வேட்பாளர்கள் எவ்வாறு நடந்து கொள்ள வேண்டும் என்ற தலைப்பிலான விழிப்புணர்வு துண்டுபிரசுரங்களை விநியோகித்தனர்.