அண்மையில் முன்னாள் யாழ் பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன் ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவை சந்தித்தது அனைவரும் அறிந்த விடயம். இச் சந்திப்பு தொடர்பாக சிறிதரன் வெளியிட்ட அறிக்கையில் தான் வடகிழக்கில் உள்ள பிரச்சனை தொடர்பாக அநுரவுடன் கலந்துரையாடியதாகவும் இனப்பிரச்சனைக்கு தீர்வு ஒன்றை முன்வைக்கும் படி கேட்டு கொண்டதாகவும் செய்தி வெளியிட்டு இருந்தார். ஆனால் அவருடைய சந்திப்பு தொடர்பில் பல அதிர்ச்சி தகவல்கள் வெளியாகியுள்ளன.
யாழ் தேர்தல் மாவட்டத்தில் மட்டும் 2024ம் ஆண்டில் மாத்திரம் 26 மதுபானசாலைகளுக்கு முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்காவினால் அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக அதிர்ச்சித் தகவல்கள் வெளியாகியுள்ளன.
அந்த மதுபானசாலை அனுமதிப் பத்திரங்களில் ஒன்று மாத்திரம் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் விக்னேஸ்வரனது சிபார்சில் வழங்கப்பட்டுள்ளது. ஏனையவை யாருடைய சிபார்சில் வழங்கப்பட்டுள்ளது என அறிய முற்பட்ட போது அநுரா தலைமையிலான அரசு அதனை இன்னும் வெளிப்படுத்தவில்லை.
இந் நிலையில் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சிறிதரன் மற்றும் சித்தார்த்தன், அங்கஜன் இராமநாதன், டக்ளஸ்தேவானந்தா போன்றவர்களுக்கும் இந்த வருடத்தில் மாத்திரம் இரண்டுக்கு மேற்பட்ட சாராய அனுமதிப்பத்திரங்கள் வழங்கப்பட்டுள்ளதாக தகவல்கள் கசிந்துள்ளன.
முன்னாள் யாழ் நாடாளுமன்ற உறுப்பினர் விக்னேஸ்வரன் சாராய அனுமதிப்பத்திரம் பெற்ற விடயத்தை அறிந்த பொதுமக்கள் கடும் கொதிப்பில் உள்ளார்கள். இதனால் கலவரமுற்ற முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன் தானும் சாராய அனுமதிப்பத்திரம் பெற சிபார்சு செய்தமை லீக் ஆகினால் தனது வாக்கு வங்கியில் கடும் சரிவு ஏற்படும் என்ற அச்சத்தில் ஜனாதிபதி அநுராவை சந்தித்து அவரது செயற்பாடு அனைத்துக்கும் தான் உறுதுணையாக இருப்பதாக கூறி சாராய அனுமத்திப்பத்திரம் பெற்றவர்களின் விபரத்தை வெளியிடாது தடுத்துள்ளதாக அதிர்ச்சித் தகவல்கள் வெளியாகியுள்ளன.
சாராாய அனுமதிப்பத்திர சிபார்சு பெற்றவர்களின் விபரங்களை வெளியிட மாட்டோம் என அநுரா உறுதியளித்த பின்னரே சிறீதரன் தெம்பாக இருந்ததாகவும் அத்துடன் தான் சாராய பார் லைசன்ஸ் பெற்றமை தொடர்பாக சமூகவலைத்தளங்களில் பதிவுகளை வெளியிட்டவர்களை தனது நண்பர்களாக இருந்த சில பொலிஸ் உயர் அதிகாரிகளைக் கொண்டு அச்சுறுத்தியதாகவும் அவர்களுக்கு எதிராக முறைப்பாடுகளைப் பதிவு செய்ததாகவும் தெரியவருகின்றது.
சிறிதரன் சாராய பார் அனுமதிப்பத்திரம் பெற்றமை தொடர்பான ஆதாரங்களை வைத்தே சுமந்திரன் சிறிதரனை மடங்கி தனக்கு கீழ் வைத்துள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. அத்துடன் தமிழரசுக் கட்சியிலிருந்து வெளியேறி தேர்தலில் போட்டியிடுமாறு கட்சி ஆதரவாளர்கள் கேட்டும் சிறீதரன் அதற்கு மறுப்புத் தெரிவித்து தமிழரசுக் கட்சியில் தொடர்ந்து இருப்பதற்குக் காரணம் சாராய அனுமதிப்பத்திர விடயத்தை சுமந்திரன் வெளியிட்டு தனது வாக்கு வங்கிக்கு ஆப்பு அடித்து விடுவார் என்ற அச்சத்திலேயே என கட்சி உள் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இந்த ஆண்டு சிறிதரன் உட்பட்டவர்களால் சிபார்சு செய்யப்பட்ட சாராய அனுமதிப்பத்திரங்களால் நீர்வேலியில் திறக்கப்படவிருந்த சாராயக்கடையை எதிர்த்து கோப்பாய் பிரதேசசெயலகத்திற்கு முன் ஆர்ப்பாட்டம் இடம்பெற்றிருந்தது. இன்றும் தெல்லிப்பளை பிரதேசசெயலகத்திற்கு முன் சாராயக்கடை திறப்புக்கு எதிராக ஆர்ப்பாட்டம் இடம்பெற்றுக் கொண்டிருக்கின்றது.
கொட்டும் மழையிலும் சாராய கடைக்கு எதிராக ஆர்ப்பாட்டம் செய்யும் குறித்த அப்பாவி இளைஞர் யுவதிகள் சாராயக்கடை முதலாளிக்கு யார் சாராய அனுமதிப்பத்திரத்தை விற்றது என்பது தெரியாது அந்த அரசியல்வாதிகளுக்கே இனியும் வாக்குப் போடவுள்ளார்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது. ஏய்தவன் இருக்க அம்பை நோவது ஏன்?
அதேசமயம் ஏற்கனவே சிறிதரன் உட்பட்ட பாராளுமன்ற உறுப்பினர்கள் வாகன பேமிட் மூலம் 5 கோடி ரூபாவுக்கு மேல் இலாபம் பெற்றுள்ளமை அம்பலத்திற்கு வந்திருந்தது குறிப்பிடத்தக்கது.