Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
பீதியை ஏற்படுத்தியுள்ள சிவராமின் கொலை வழக்கு விசாரணை; அச்சத்தில் தமிழ் கட்சி ஒன்று!

பீதியை ஏற்படுத்தியுள்ள சிவராமின் கொலை வழக்கு விசாரணை; அச்சத்தில் தமிழ் கட்சி ஒன்று!

2 years ago
in செய்திகள்

ஜேவிபி மீள் விசாரணைக்கு தெரிவு செய்துள்ள ஏழு குற்ற வழக்குகளில் திரு சிவராம் அவர்கள் கொலை வழக்கும் அடங்கிருப்பதாக சொல்லப்படுகின்றது.

தர்மரத்தினம் சிவராம் (தராகி) அவர்கள் கடத்தப்பட்டு ஏப்ரல் 28, 2005 அன்று கொலை செய்யப்பட்டார்.

திருசிவராம் அவர்களை வீழ்த்திய கொலையாளிகள் புளொட் அமைப்பை சேர்ந்தவர்கள் என Sunday Times அம்பலப்படுத்தியிருந்தது.

குறிப்பாக புளொட் தலைவர் சித்தார்த்தன் (சங்கு சின்னத்தை அபகரித்த தரப்பு) அவர்களின் பெயரில் பதியப்பட்டிருந்த வாகனமே கொலையில் பயன்படுத்தப் பட்டிருந்தது என்பதையும் Sunday Times வெளிக்கொண்டு வந்திருந்தது.

இது தவிர திரு சிவராம் கொலை தொடர்பாக விசாரணைகளில் அவரின் கைத்தொலைபேசியும், SIMமும் இனங்காணப்பட்டது.

இதனடிப்படையில் கொழும்பில் புளொட் அலுவலகத்தை சுற்றி வளைத்த பொலிசார் அங்கு ஆறுமுகம் ஸ்ரீஸ்கந்தராஜா (பீற்றர்) மற்றும் வேலாயுதன் நல்லநாதா ஆகிய புளொட் உறுப்பினர்களை கைதும் செய்தனர்.


இதில் பீற்றர் புளொட் அமைப்பின் கொழும்பு அமைப்பாளராகவும், சித்தார்த்தனின் உதவியாளராகவும் அடையாளம் காணப்பட்டு இருந்தார்.

ஆனால் புளொட், டக்லஸ் தேவானந்தா மற்றும் பிள்ளையான் சகிதம் அரச புலனாய்வு கட்டமைப்பில் குறித்த காலத்தில் பணியில் ஈடுபட்டிருந்ததால் போதிய முகாந்திரம் இருந்தும் சித்தார்த்தன் விசாரிக்கப்படாமலேயே வழக்கு கைவிடப்பட்டது.

பொலிஸாரால் கைது செய்யப்பட்ட இரண்டு புளொட் உறுப்பினர்களும் கூட விடுவிக்கப்பட்டனர். இப்போது ஜேவிபியால் இவ் வழக்கு மீண்டும் பேசு பொருளாகியிருக்கின்றது.

லசந்த விக்கிரமதுங்க , பிரதீப் எக்னெலிகொட காணாமலாக்கப்பட்டமை, வாசிம் தாஜுதீன் மரணம், வெள்ளை வான் கடத்தல்கள் உட்பட பல்வேறு High Profile வழக்குகள் குறித்து அமைதியாக கடந்து போகும் சம நேரத்தில் வெறும் ஏழு வழக்குகளை மட்டும் தூசி தட்ட முயற்சிக்கும் ஜேவிபியின் நோக்கம் குறித்து பல்வேறு மட்டங்களில் கேள்விகள் எழுப்பப்படுகின்றன.

எப்படியிருந்தாலும் ஊடகவியலாளர் திரு சிவராம் அவர்களை கொன்ற கொலை சந்தேக நபர் சித்தார்த்தன் கைது செய்யப்பட்டு நீதியின் முன் நிறுத்தப்பட வேண்டிய நபர் ஆவர்.

தமிழ்த் தேசத்தின் புலமை சொத்தாகவிருந்த திரு சிவராம் அவர்களை வீழ்த்தியவர்களை ஒரு போதும் மன்னிக்க முடியாது . திரு சிவராம் களத்திலிருந்து அகற்றப்பட்டு 19 ஆண்டுகள் கடந்து விட்ட பின்னரும் கூட அவரின் ஊடகவியல் வெற்றிடத்தை தமிழர்களால் நிரப்ப முடியவில்லை என்பதே அவரின் பெறுமதிக்கு சான்றாக இருக்கின்றது. நீதிக்கு முன் நிறுத்த வேண்டிய சம நேரத்தில் சங்கு சின்னத்தில் வாக்கு கேட்கும் சித்தார்த்தன் அவர்களை மக்கள் மன்றத்திலும் தோற்கடிக்க வேண்டும்.

Tags: Battinaathamnewssrilankanews

தொடர்புடையசெய்திகள்

அம்பாறை மாவட்ட உயிர்காக்கும் குழுவின் இரண்டாம் கட்ட நீச்சல் பயிற்சி தீவிரம்
செய்திகள்

அம்பாறை மாவட்ட உயிர்காக்கும் குழுவின் இரண்டாம் கட்ட நீச்சல் பயிற்சி தீவிரம்

September 27, 2026
பௌர்ணமி தினத்தில் சட்டவிரோதமாக மதுபானம் விற்றவர்கள்
செய்திகள்

பௌர்ணமி தினத்தில் சட்டவிரோதமாக மதுபானம் விற்றவர்கள்

September 27, 2026
ஹோர்முஸ் நீரிணை முழுவதுமாக எமது கட்டுப்பாட்டில் வந்துவிட்டது; ட்ரம்ப் அறிவிப்பு
உலக செய்திகள்

ஹோர்முஸ் நீரிணை முழுவதுமாக எமது கட்டுப்பாட்டில் வந்துவிட்டது; ட்ரம்ப் அறிவிப்பு

September 27, 2026
யாழில் தியாக தீபம் திலீபனின் உருவச்சிலையை அகற்றிய பொலிஸார்
செய்திகள்

யாழில் தியாக தீபம் திலீபனின் உருவச்சிலையை அகற்றிய பொலிஸார்

September 27, 2026
லண்டன் விபத்தில் இலங்கையைசேர்ந்த மாணவி உயிரிழப்பு
உலக செய்திகள்

லண்டன் விபத்தில் இலங்கையைசேர்ந்த மாணவி உயிரிழப்பு

September 27, 2026
பலவந்தமாக வாகனங்களை கையகப்படுத்தும் லீசிங் நிறுவனகளுக்கு பொலிஸ் திணைக்களம் எச்சரிக்கை
செய்திகள்

பலவந்தமாக வாகனங்களை கையகப்படுத்தும் லீசிங் நிறுவனகளுக்கு பொலிஸ் திணைக்களம் எச்சரிக்கை

September 27, 2026
Next Post
சுமந்திரன் அணியை பற்றிய புதிய வாக்கு மூலம்; பாதிக்கப்பட்டவரின் சுய அறிக்கை

சுமந்திரன் அணியை பற்றிய புதிய வாக்கு மூலம்; பாதிக்கப்பட்டவரின் சுய அறிக்கை

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு
No Result
View All Result
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.