Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
மழையுடன் கூடிய காலநிலை; மீனவர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை!

மழையுடன் கூடிய காலநிலை; மீனவர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை!

2 years ago
in செய்திகள்

நாட்டின் தென்மேற்குப் பிராந்தியத்தில் பெய்துவரும் பலத்த மழையுடனான வானிலை படிப்படியாக குறைவடையும் என எதிர்பார்க்கப்படுகிறது என வளிமண்டல திணைக்களத்தின் சிரேஸ்ட வானிலை அதிகாரி கலாநிதி மொஹமட் சாலிஹீன் தெரிவித்தார்.

அவர்மேலும் தெரிவிக்யைில்,

வட மாகாணத்தில் அடிக்கடி மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும். சில இடங்களில் 50 மில்லி மீற்றர் இயலும் கூடிய ஓரளவு பலத்த மழை பெய்யக்கூடும்.

சப்ரகமுவ, மேல் மற்றும் வடமேல் மாகாணங்களிலும் அத்துடன் காலி, மாத்தறை, கண்டி மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் இடைக்கிடையே மழை பெய்யக்கூடும்.

நாட்டின் ஏனைய பிரதேசங்களின் பல இடங்களில் மாலை அல்லது இரவு வேளைகளில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும்.

பலத்த காற்றும் மின்னல் தாக்கங்களும் ஏற்படக்கூடிய சந்தர்ப்பங்களில் பொதுமக்கள் அவதானத்துடன் செயற்படுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றனர்.

கடல் பிராந்தியங்களில் மட்டக்களப்பு தொடக்கம் திருகோணமலை, காங்கேசன்துறை ஊடாக மன்னார் வரையான ஆழமான மற்றும் ஆழமற்ற கடல் பிராந்தியங்களுக்கு நாளை வரையில் மீனவர்களும் கடல்சார் ஊழியர்களும் செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்படுகின்றனர்.

நாட்டை சூழ உள்ள கடல் பிராந்தியங்களின் பல இடங்களில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும்.

கடல் பிராந்தியங்களில் மணித்தியாலத்திற்கு 30 -40 கிலோ மீற்றர் வேகத்தில் தென்மேற்குத் திசையில் இருந்து காற்று வீசும்.

காலி தொடக்கம் ஹம்பாந்தோட்டை , மட்டக்களப்பு, திருகோணமலை, காங்கேசன்துறை ஊடாக மன்னார் வரையான கடல் பிராந்தியங்களில் மணித்தியாலத்திற்கு 60 – 65 கிலோ மீற்றர் இலும் கூடிய வேகத்தில் அடிக்கடி காற்று அதிகரித்து வீசக் கூடும். இவ்வாறான சந்தர்ப்பங்களில் இக் கடல் பிராந்தியங்கள் மிகவும் கொந்தளிப்பாகக் காணப்படும்.

நாட்டை சூழ உள்ள ஏனைய கடல் பிராந்தியங்களில் மணித்தியாலத்திற்கு 50 கிலோ மீற்றர் இலும் கூடிய வேகத்தில் இடைக்கிடையே காற்று அதிகரித்து வீசக்கூடும். இவ்வாறான சந்தர்ப்பங்களில் இக் கடல் பிராந்தியங்கள் கொந்தளிப்பாகக் காணப்படும்.

ஆனால் இடியுடன் கூடிய மழை பெய்கின்ற வேளைகளில் பலத்த காற்று வீசுவதுடன் அவ்வேளைகளில் கடல் பிராந்தியங்கள் தற்காலிகமாக மிகவும் கொந்தளிப்பான நிலையில் காணப்படும்.

சிலாபம் தொடக்கம் கொழும்பு, காலி, ஹம்பாந்தோட்டை ஊடாக பொத்துவில் வரையான கடல் பிராந்தியங்களில் கடல் அலையானது 2.5 – 3.0 m உயரத்திற்கு மேலெளக்கூடிய சாத்தியம் காணப்படுகின்றது. இது தரைப் பிரதேசத்திற்கு தாக்கத்தை ஏற்படுத்தாது என தெரிவித்துள்ளார்.

Tags: Battinaathamnewssrilankanews

தொடர்புடையசெய்திகள்

NPP எதிர்ப்பை மீறி குறிகாட்டுவான் சுற்றுவட்டத்தில் நாகபூசணி அம்மன் சிலை அமைக்க ஒப்புதல்
செய்திகள்

NPP எதிர்ப்பை மீறி குறிகாட்டுவான் சுற்றுவட்டத்தில் நாகபூசணி அம்மன் சிலை அமைக்க ஒப்புதல்

June 18, 2026
கோட்டாபய ராஜபக்ஷவின் முன்னாள் தனிப்பட்ட செயலாளர் கைது!
செய்திகள்

கோட்டாபய ராஜபக்ஷவின் முன்னாள் தனிப்பட்ட செயலாளர் கைது!

June 18, 2026
சிகை அலங்கார ஊழியர் மீது தாக்குதல்; சந்தேக நபர் கைது!
செய்திகள்

சிகை அலங்கார ஊழியர் மீது தாக்குதல்; சந்தேக நபர் கைது!

June 18, 2026
“நாங்கள் தமிழர்கள் அல்ல, தமிழ் பேசும் அரேபியர்கள்”; இலங்கை முஸ்லிம்களின் தமிழ் அடையாள மறுப்பு வரலாறு!
செய்திகள்

“நாங்கள் தமிழர்கள் அல்ல, தமிழ் பேசும் அரேபியர்கள்”; இலங்கை முஸ்லிம்களின் தமிழ் அடையாள மறுப்பு வரலாறு!

June 18, 2026
எண்ணெய் விலை குறைந்தும் எரிபொருள் விலை ஏன் குறையவில்லை?; சஜித் கேள்வி!
செய்திகள்

எண்ணெய் விலை குறைந்தும் எரிபொருள் விலை ஏன் குறையவில்லை?; சஜித் கேள்வி!

June 18, 2026
126 பாடசாலை விடுதிகளை மேம்படுத்த ரூ.1,008 மில்லியன் ஒதுக்கீடு!
செய்திகள்

126 பாடசாலை விடுதிகளை மேம்படுத்த ரூ.1,008 மில்லியன் ஒதுக்கீடு!

June 18, 2026
Next Post
அரச ஊழியர்களின் சம்பளம் தொடர்பில் வெளியான தகவல்

அரச ஊழியர்களின் சம்பளம் தொடர்பில் வெளியான தகவல்

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு
No Result
View All Result
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.