பூமியை பாதிக்கக்கூடிய அதிவேக சூரியப் புயல் இன்று(07.07.2023) காலை உலகை வந்தடையும் என நாசா தெரிவித்துள்ளது.
இந்த சூரியப் புயல், பிரகாசமான ‘அரோரா’ எனும் துருவ ஒளி போல காட்சியளிக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், சூரியப் புயலின் தாக்கம் மின் கட்ட அமைப்புகளை பாதிக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனால் உலகெங்கிலும் மின்சாரம் மற்றும் தகவல் தொடர்பு உட்கட்டமைப்பு பாதிக்கப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
காந்த புயலின் உள்வரும் எரிப்புகளால் பூமியின் மேல் வளிமண்டலத்தில் உள்ள செயற்கைக் கோள்களும் பாதிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும், ஜி.பி.எஸ் வழிசெலுத்தல், தொலைபேசி இணைப்புகள் மற்றும் செயற்கைக்கோள் தொலைக்காட்சி இணைப்புக்களை நேரடியாக பாதிக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
சூரியன் அதன் சக்தி வாய்ந்த ஆற்றலை வெளியிடுவதனால் சூரிய புயல் ஏற்படுகிறது. இதுகுறித்து நாசா வெளியிட்டுள்ள அறிக்கையில், “இம்மாத தொடக்கத்தில் இருந்து பலமுறை சூரிய புயல் பூமியை கடந்து செல்லும்” என தெரிவிக்கப்பட்டுள்ளது.