மட்டக்களப்பில் இலங்கை சமூக பாதுகாப்பு சபையின் கிழக்கு மாகாணத்திற்காக பயிற்சி பாசறை மட்டக்களப்பு மாவட்ட மேலதிக மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி நவருபரஞ்சினி முகுந்தன் தலைமையில் இலங்கை சமூக பாதுகாப்பு சபையின் மாவட்ட இணைப்பதிகாரி ஏ.எம். அமீன் ஏற்பாட்டில் வட கிழக்கு மாகாண சிரேஸ்ட இணைப்பு அதிகாரி பி. பிரதீபன் பங்கு பற்றுதலுடன் பழைய மாவட்ட செயலக மாநாட்டு மண்டபத்தில் நேற்றுமுன்தினம் (16) இடம் பெற்றது.
இலங்கை சமூக பாதுகாப்பு சபையின் ஓய்வுதிய திட்டத்தினை மக்கள் மத்தியில் கொண்டு செல்வதற்கான நுட்பங்களை மற்றும் உபாய நெறிமுறைகளையும் உத்தியோகத்தர்களுக்கு இதன் போது வழங்கப்பட்டது.
அரசாங்க ஓய்வூதியம் பெறாதவர்களுக்கு ஓய்வூதியம் மற்றும் சமூக பாதுகாப்பு நலன்களை வழங்குவதே இலங்கை சமூக பாதுகாப்பு சபையின் பணியாக காணப்படுகின்றது.
அரசாங்கத்தினால் மக்கள் நலன் சார்ந்த அபிவிருத்தி வேலைத்திட்டங்களை மக்கள் மத்தியில் கொண்டு செல்வதற்கும் அவற்றை வெற்றிகரமாக நிறைவேற்றுவதற்கு தேவையான ஆலோசனை மற்றும் வழி காட்டுதல்கள் இதன் போது துறைசார் நிபுணர்களினால் வழங்கப்பட்டது.
இலங்கை சமூகப் பாதுகாப்புச் சபையானது 1996 ஆம் ஆண்டின் 17 ஆம் இலக்க திருத்தச் சட்டம் மற்றும் 1999 ஆம் ஆண்டு இல 33 ஆம் இலக்கத்தின் மூலம் நிறுவப்பட்ட செயற்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கதாகும்.
இந் நிகழ்வின் அம்பாறை மாவட்ட இணைப்பதிகாரி எஸ்.ரீ.சுதாகரன், கிழக்கு மாகாண அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.