Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
கனவு மூலம் ஒருவரை ஒருவர் தொடர்பு கொள்ள முடியும் என்பதை நிரூபித்து விஞ்ஞானிகள் சாதனை

கனவு மூலம் ஒருவரை ஒருவர் தொடர்பு கொள்ள முடியும் என்பதை நிரூபித்து விஞ்ஞானிகள் சாதனை

2 years ago
in உலக செய்திகள், செய்திகள், தொழில்நுட்பம்

கனவு மூலம் ஒருவரை ஒருவர் தொடர்பு கொள்ள முடியும் என்பதை நிரூபித்து விஞ்ஞானிகள் சாதனை படைத்துள்ளனர்.

அமெரிக்காவின் கலிபோர்னியாவில் இயங்கி வரும், REMspace எனும் ஸ்டார்ட்அப் நிறுவனத்தில் பணியாற்றும் ஆய்வாளர்களே இந்த சாதனையை படைத்துள்ளனர்.

இந்த ஆய்வுக்காக ஒரு ஆண், ஒரு பெண் என இருவரை தேர்ந்தெடுத்து இருவருக்கும் கனவுகளை அடையாளம் காண பயிற்சி வழங்கப்பட்டுள்ளது.

அதாவது உறக்கத்தில் ‘ரெம்’ எனும் ஒரு கட்டம் காணப்படுகின்றது.

இந்த கட்டத்தில் நாம் காணும் கனவுகளை நம்மால் அடையாளம் காண முடியும். ஆனால் இதை தொடர்ந்து அடையாளம் காண முறையான பயிற்சி அவசியம்.

இதன் மூலம் நாம் என்ன கனவு கண்டுக்கொண்டிருக்கிறோம் என்பதையும், கனவில் நமக்கு தேவையான சில மாற்றங்களையும் செய்து கொள்ள முடியும்.

இந்நிலையில், இந்த பயிற்சியை பெற்ற இருவர் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்.

சோதனையில், முதலில் ஆண் நபர் ஆழ்ந்த உறக்கத்திற்கு சென்ற பின்னர் சில விநாடிகளில் ‘ரெம்’ நிலையை அடைந்துள்ளார்.

இதன்போது, அவரது மூளையில் ஏற்படும் மாற்றங்களை கண்காணிக்க சில பிரத்யேக கருவிகள் அவரது உடலில் பொருத்தப்பட்டிருந்துடன் ரெம் நிலையை அவர் அடைந்ததும், அவரது காதில் பொருத்தப்பட்டிருந்த ஹெட் போனுக்கு கம்ப்யூட்டரிலிருந்து ‘ஜிலாக்’ எனும் வார்த்தை ‘ரெமியோ’ மொழியில் அனுப்பப்பட்டுள்ளது.

ரெமியோ என்பது சிறப்பு கணினி மொழியாகும் என்பதுடன் இந்த வார்த்தையை முதல் நபர் தனது கனவில் உச்சரித்திருக்கிறார்.

இந்த சம்பவம் நடந்து 8 நிமிடங்கள் கழித்து இரண்டாவதாக பெண் ஆழ்ந்த உறக்கத்திற்கு சென்று ரெம் நிலையை எட்டியுள்ளார்.

அதன்போது, முதல் நபர் கேட்ட, ‘ஜிலாக்’ எனும் வார்த்தையை அவரும் கேட்டிருக்கிறார். எனினும் கணினியிலிருந்து அவருக்கு எந்த வார்த்தையும் அனுப்பப்படவில்லை.

எனவே உறக்கத்தின்போது கனவு வழியாக தகவல் பரிமாற்றம் நடந்திருக்கிறது என்பதை ஆய்வாளர்கள் கண்டரிந்துள்ளனர்.

அத்துடன், இப்படி நடப்பது இதுவே முதல்முறை என்றும் ஆய்வாளர்கள் கூறியுள்ளனர்.

இதற்கு முன்னர் கனவில் தகவல் பரிமாற்றம் குறித்து பல்வேறு கருத்துக்கள் இருந்தது வந்த போதிலும் அவை எதுவும் நிரூபிக்கப்படவில்லை.

கனவில் தகவல் பரிமாற்றம் குறித்து விளக்கிய ஆய்வாளர்கள், “இந்த ஆய்வு கடந்த செப்டம்பர் 24ஆம் திகதி இடம்பெற்றது. சுமார் 5 ஆண்டுகளாக மேற்கொண்ட முயற்சிக்கு தற்போது பலன் கிடைத்திருக்கிறது.

கனவை ஆய்வு செய்வதன் மூலம் ஒருவரின் உளவியலை நன்கு புரிந்து கொள்ள முடியும்.

மனம் சார்ந்த சிக்கல்கள், பிரச்சினைகளுக்கு இதன் மூலம் சிகிச்சை அளிக்க முடியும்.

ஆகவே இந்த ஆய்வு, மனிதகுல வளர்ச்சியை முன்னோக்கி நகர்த்துகிறது” என ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.

Tags: Battinaathamnewssrilankanews

தொடர்புடையசெய்திகள்

நாமல் ராஜபக்சவுக்கு வீட்டிலிருந்து கொண்டுவரும் உணவை சாப்பிட அனுமதி
செய்திகள்

நாமல் ராஜபக்சவுக்கு வீட்டிலிருந்து கொண்டுவரும் உணவை சாப்பிட அனுமதி

September 7, 2026
மட்டு பாலமீன்மடு சந்தை கட்டிடம் இடிந்து விழும் அபாயத்தில் உள்ளது; அந்தனிசில் ராஜ்குமார்
செய்திகள்

மட்டு பாலமீன்மடு சந்தை கட்டிடம் இடிந்து விழும் அபாயத்தில் உள்ளது; அந்தனிசில் ராஜ்குமார்

September 7, 2026
மட்டக்களப்பில் “இரு முகம்” திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா!
காணொளிகள்

மட்டக்களப்பில் “இரு முகம்” திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா!

September 7, 2026
யால தேசிய வனத்தின் இரண்டு வலயங்களுக்கு பூட்டு
செய்திகள்

யால தேசிய வனத்தின் இரண்டு வலயங்களுக்கு பூட்டு

September 7, 2026
அம்பிட்டிய சுமண ரத்ன தேரர் மட்டக்களப்பு பொலிஸாரினால் கைது!
செய்திகள்

அம்பிட்டிய சுமண ரத்ன தேரர் மட்டக்களப்பு பொலிஸாரினால் கைது!

September 7, 2026
கோயில்கள், பள்ளிவாசல்களுக்கு அருகில் மாட்டிறைச்சி கழிவுகள் வீசப்படுவதை தடுத்து நிறுத்த வேண்டும்; செ. நிலாந்தன்
செய்திகள்

கோயில்கள், பள்ளிவாசல்களுக்கு அருகில் மாட்டிறைச்சி கழிவுகள் வீசப்படுவதை தடுத்து நிறுத்த வேண்டும்; செ. நிலாந்தன்

September 7, 2026
Next Post
தேர்தல் ஆணைக்குழுவின் தீர்மானத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து மனு தாக்கல்

தேர்தல் ஆணைக்குழுவின் தீர்மானத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து மனு தாக்கல்

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு
No Result
View All Result
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.