2019 ஈஸ்டர் ஞாயிறு தினத் தாக்குதல்கள் தொடர்பான ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவின் அறிக்கையை வெளியிடுவது தொடர்பில் தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் குருடாகவும் செவிடாகவும் செயற்படுவதாக பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளர் நாமல் ராஜபக்ஷ கடுமையாக சாடியுள்ளார்.
தனது எக்ஸ் தள பக்கத்தில் இட்ட பதிவொன்றிலேயே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவின் மேலும் இரண்டு அறிக்கைகள் வெளியிடப்படாமல் உள்ளமை வெளிப்படைத்தன்மை பற்றிய கேள்விகளை எழுப்புகின்றன.
“ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல்கள் தொடர்பான ஆணைக்குழுவின் அறிக்கையை வெளியிடுவதில் அரசாங்கம் கட்டுப்பாட்டை மீறிவிட்டது.
ஈஸ்டர் தாக்குதல் அறிக்கையில் விடுபட்ட பக்கங்கள் இன்னும் இருப்பதாக ஒரு கருத்து நிலவி வரும் நிலையில், அரசாங்கம் அதனை இன்னும் கண்டுபிடிக்கவில்லை.
அரசாங்கம் அறிக்கைகளை வெளியிடுவதில் குருடாகவும் செவிடாகவும் செயல்படுகிறது. வெறும் பேச்ச மாத்திரமே எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.
சந்தேகங்கள் நிறைந்திருக்கும் விடயங்களில் அரசாங்கம் பதில் சொல்வது அவசியமானதென அவரது பதிவில் அவர் வலியுறுத்தியுள்ளார்.