அரச புலனாய்வு சேவையின் முன்னாள் பிரதானி சுரேஷ் சலே கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக வைத்தியசாலை தகவல்கள் தெரிவிக்கின்றன.
குற்றப்புலனாய்வு திணைக்களத்தின் கீழ் தடுத்து வைக்கப்பட்டிருந்த அவருக்கு ஏற்பட்ட உடல்நலக் குறைவினால் அவர் இவ்வாறு சிகிச்சைகளுக்காக அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
கொழும்பு வைத்தியசாலையில் அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக வைத்தியசாலை தகவல்கள் குறிப்பிடுகின்றன.
அதேசமயம் அவர் சாகும் வரை உண்ணாவிரப்போராட்டத்த்தில் ஈடுபட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.








