Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
பௌத்த மத வெறுப்பை பரப்பும் சமூக ஊடகப் பக்கங்கள் மீது நடவடிக்கை வேண்டும்; சிங்கள ராவய அமைப்பு

பௌத்த மத வெறுப்பை பரப்பும் சமூக ஊடகப் பக்கங்கள் மீது நடவடிக்கை வேண்டும்; சிங்கள ராவய அமைப்பு

3 months ago
in செய்திகள், முக்கிய செய்திகள்

இலங்கையின் அரசியலமைப்பின் பிரகாரம் பௌத்த சாசனத்தைப் பாதுகாத்து அதனைப் போஷிப்பது அரசாங்கத்தின் அடிப்படைப் பொறுப்பாகும் என சிங்கள ராவய தேசிய அமைப்பின் தலைவர் அக்மீமன தயாரத்ன தேரர் தெரிவித்துள்ளார்.

சிங்கள ராவய அமைப்பின் காரியாலயத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கருத்து வெளியிட்ட அவர், அண்மைக் காலமாக சமூக ஊடகங்களில் பௌத்த சாசனத்திற்கும் பிக்கு சமூகத்திற்கும் எதிரான கருத்துக்கள் திட்டமிட்ட வகையில் பரப்பப்படுவதாக குற்றஞ்சாட்டினார்.

மகா சங்கத்தினரிடையே இடம்பெறும் தனிப்பட்ட சில சம்பவங்களை முன்னிறுத்தி முழு பிக்கு சமூகத்தையும் அவமதிக்கும் நடவடிக்கைகள் இடம்பெறுவதாகக் குறிப்பிட்ட அவர், இது பௌத்த சாசனத்திற்கு களங்கம் ஏற்படுத்தும் முயற்சியாகக் காணப்படுவதாக தெரிவித்தார்.

பல்லேகம தேரர் தொடர்பான விவகாரத்தில் சட்டம் தனது கடமையைச் செய்ய வேண்டும் என்பதில் மாற்றுக் கருத்து இல்லை என்றாலும், அதனை காரணமாகக் கொண்டு அனைத்து பிக்குகளையும் இழிவுபடுத்தும் சமூக ஊடகப் பிரசாரங்களுக்கு எதிராகவும் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என அவர் வலியுறுத்தினார்.

மேலும், பௌத்த சாசனத்தைப் பாதுகாப்பது தொடர்பில் அரசாங்கம் தனது அரசியலமைப்பு பொறுப்பை நிறைவேற்ற வேண்டும் என்றும், மத வெறுப்பைத் தூண்டும் மற்றும் பிக்கு சமூகத்தை இலக்காகக் கொண்ட சமூக ஊடகப் பக்கங்கள் மீது சட்டரீதியான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட வேண்டும் என்றும் அவர் கோரிக்கை விடுத்தார்.

Tags: BatticaloaBatticaloaNewsBattinaathamnewselectioninternationalnewsmattakkalappuseythikalpoliticalnewsSrilankasrilankanewssrilankapolice

தொடர்புடையசெய்திகள்

சாவகச்சேரியில் அநுர அரசுக்கு எதிராக கண்டன உண்ணாவிரதப் போராட்டம்!
செய்திகள்

சாவகச்சேரியில் அநுர அரசுக்கு எதிராக கண்டன உண்ணாவிரதப் போராட்டம்!

September 12, 2026
போர்க்காலத்தில் பயன்படுத்தப்பட்ட குண்டுகளா?;  பாதாள உலகக் குழுக்கள் மீது புதிய சந்தேகம்!
செய்திகள்

போர்க்காலத்தில் பயன்படுத்தப்பட்ட குண்டுகளா?; பாதாள உலகக் குழுக்கள் மீது புதிய சந்தேகம்!

September 12, 2026
மட்டக்களப்பில் ஆலய உற்சவ வெடி விபத்தில் சிறுவன் உயிரிழப்பு!
செய்திகள்

மட்டக்களப்பில் ஆலய உற்சவ வெடி விபத்தில் சிறுவன் உயிரிழப்பு!

September 12, 2026
சுகாதார சேவை வெற்றிடங்கள் தொடர்பில் GMOA கோரிக்கை
செய்திகள்

சுகாதார சேவை வெற்றிடங்கள் தொடர்பில் GMOA கோரிக்கை

September 11, 2026
மூதூர் தள வைத்தியசாலை சிற்றுண்டிச்சாலையை மூட நீதிமன்றம் உத்தரவு!
செய்திகள்

மூதூர் தள வைத்தியசாலை சிற்றுண்டிச்சாலையை மூட நீதிமன்றம் உத்தரவு!

September 11, 2026
வாகரையில் கரைவலை படகு விபத்து
செய்திகள்

வாகரையில் கரைவலை படகு விபத்து

September 11, 2026
Next Post
குறைக்கப்படப்போகும் தனியார் பேருந்து சேவைகள்

குறைக்கப்படப்போகும் தனியார் பேருந்து சேவைகள்

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு