இதயத்திலிருந்து காவியம் ஓவியம் எல்லாம் ஓகே! எங்க தேர்தல் பிரச்சாரங்களில் தலைவரை காணோம்? வேட்பாளர் அறிமுகத்தில் கூட ஆள் நடுவில் இருந்தாலும் பக்கத்தில் இருந்து ரெண்டு பேர் ஏய் அர்ச்சூனா நீ வாய திறக்காத.. ஏய் நீ பதில் சொல்லாதைனு கடிவாளம் போட்டுத்தான் கூட்டியந்திருந்தார்கள். டெய்லி பத்து பதினைஞ்சு லைவ் விட்டவர் இப்ப டெய்லி ஒண்ணு ரெண்டாச்சும் தேர்தல் பரப்புரைக்கு விடுகிறாரா? இல்லைனா ஏன்?
- அவர் வாயைய் திறந்தால் வரும் கொஞ்ச ஓட்டும் வராமல் போய்விடும். கேலிக்கூத்தாக மாறிவிடும் என்கிற அச்சம்.
- ஜனாதிபதித் தேர்தலில் தினமும் ஒரு கொள்கை கொண்டு, தினம் ஒரு கட்சிக்கு பாய்ந்தவர், ஒரு கொள்கை உறுதியும், முடிவில் திடமும் இல்லாதவரை முன்னிறுத்தினால் மக்கள் நம்பிக்கை வைக்கமாட்டார்கள்.
- ஏற்கனவே ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளைச் சுமத்தி ஆதாரங்களை சமர்பிக்க தவறியதால் நீதிப்படி தண்டனை பெற்றவர், இன்னும் மேலும் பலர் மீதும் தன் தனிப்பட்ட நலனுக்காக அவதூறுகளை வீசக்கூடும் என்கிற அச்சம்.
- நீதிமன்ற உத்தரவுகளை மதிக்காமல், நீதியை பின்பற்றாமல் இருக்கும்/ இருந்த தனி நபரினை மக்கள் பிரதிநிதியாக முன்னிறுத்த பயம்.
தேர்தலின் போது பொதுவில் பேச அச்சப்படும்- அச்சத்தினால் சூழ இருப்போரால் முடக்கி வைக்கப்படும் ஒருவர் எப்படி மக்கள் பிரதிநிதி ஆக முடியும்?
அப்போ, சுற்றியிருக்கும் கடிவாளங்கள் இல்லையெனில் இவர் செயல்கள் கண்மூடித்தனமாக, சமூக பொறுப்பற்றிருக்கும் என்பதை கடிவாளம் வைத்திருப்பவர்கள் உணர்கிறீர்களா?
தேர்தல் முடிந்ததும் உங்கள் கடிவாளங்கள் கழன்றதும், இவரால் ஏற்படக்கூடிய சமூக குழப்பங்களுக்கும், மக்களை ஜனாதிபதித் தேர்தலில் தன் நலனுக்கு பகடைக்காய் ஆக்கியதைப் போல் மீண்டும் ஆகும் பட்சத்தில், நீங்கள் ஒவ்வொருவரும் பொறுப்பாளிகள் ஆவீர்கள் என்பதை பொறுப்பேற்கத் தயாரா? இல்லை அப்போது எங்களுக்கு இதில் சம்பந்தமில்லை என நல்லவர் வேஷம் போட்டு ஓடிவிடுவீர்களா?
உங்கள் கடிவாளங்களை எடுத்து விடுங்கள். உண்மையான அர்ச்சூனாவை தேர்தலில் வாக்களிக்கும் மக்கள் காணட்டும். அதன்பின் முடிவுசெய்யட்டும் என யாழ் மாவட்டத்திலிருந்து நலன் விரும்பிகள் தெரிவிக்கின்றனர்.