“வவுனியாவில் சீனித் தொழிற்சாலை அமைப்பது தொடர்பான விடயத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் அங்கம் வகிக்கும் ரெலோ கட்சியின் தலைவர் செல்வம் அடைக்கலநாதனின் செயற்பாட்டை நாங்கள் ஏற்றுக்கொள்ளத் தயாரில்லை. எம்முடன் எந்தப் பேச்சும் நடத்தாமல் இந்த விடயத்தில் முடிவெடுக்கப்பட்டுள்ளது. இந்த சீனித் தொழிற்சாலை நிறு வப்படுவதை நாம் ஒருபோதும் அனுமதிக்கமாட்டோம். இதன் பின்னணி என்ன என்பது எமக்கு நன்றாகத் தெரியும். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தனது வழியில் இருந்து விலகி பயணிக்குமானால் அதிலிருந்து வெளியேறுவதற்கு நாம் தயங்க மாட்டோம். நாம் பதவிகளுக்கு ஆசைப்பட்டவர்களல்லர்.
இவ்வாறு தெரிவித்துள்ளார் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பங்காளிக் கட்சிகளில் ஒன்றான
ஜனநாயகப் போராளிகள் கட்சியின் பொதுச் செயலாளர் இ.கதிர் தொலைக்காட்சி நிகழ்ச்சியில் பங்கேற்று
கருத்து வெலியிடும்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்-தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஒற்றுமை குலையக்கூடாது என்பதற்கா
கவே அதில் பங்காளிக் கட்சியாக இணைந்து நாம் பயணிக்கின்றோம். ஏனெனில் அது எமது தலைமையினால் உருவாக்கப்பட்ட கட்சி. அதில் பங்காளிகளாக இருப்பவர்கள் அதனை விளங்கிக் கொண்டு செயற்படவேண்டும்.
ஜனநாயகப் போராளிகளாகிய எங்களுக்கு பதவி ஆசை கிடையாது. அதற்காக நாங்கள் இந்தக் கூட்டமைப்பில் இணையவில்லை. ஆயுதப் போராட்டம் மௌனிக்கப்பட்ட நிலையில் அரசியல் ரீதியாக எமது இலக்கை அடைவதற்காகவே நாங்கள் கூட்டமைப்பில் இணைந்து பயணிக்கின்றோம்.
கூட்டமைப்பு பயணிக்கும் பாதை தவறானது எனக் கண்டால் அதிலிருந்து வெளியேறத் தயங்கமாட்டோம்.வவுனியாவில் சீனித் தொழிற்சாலை நிறுவ எடுக்கப்படும் முயற்சியை நாங்கள் முற்றாக எதிர்க்கின்றோம். அந்த தொழிற்சாலைக்கான முதலீடு எந்த நாட்டினுடையது என்பது எங்களுக்கு நன்றாகத் தெரியும். இதன் பின்னணியில் உள்ளவர்கள் யார் என்பதும் எமக்கு தெரியும். இதைப் பற்றி பூரண தகவல்
களை எமது சர்வதேச வலையமைப்புகள் ஊடகப் பெற்றுள்ளோம்.
இந்த விடயத்தில் ரெலோ தலைவர் செல்வம் அடைக்கலநாதன் செயற்படும் விதம் மிகத் தவறானது. அதனை நாம் ஒருபோதும் ஏற்கத் தயாரில்லை. இது பற்றி எம்மோடு எதுவும் பேசப்பட வில்லை. இதனை நாம் முற்றாக எதிர்க் கின்றோம். அந்த தொழிற்சாலையை நிறுவ நாம் இடமளிக்கப்போவதில்லை.எமது அண்டை நாடு இந்தியா. அந்த நாட்டுடன் உண்மையான உறவைப் பேணுவதற்கு தமிழ்க் கட்சிகளின் தலைவர்கள் தவறிவிட்டார்கள். இதனால் நாங்கள் அந்த நாட்டுடன் எமது உரிமைகளை அடைவதற்காக பல வழிகளில்
தொடர்புகளை பேணுகின்றோம்.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு என்ற கட்சிக்கு இலங்கைத் தமிழரசுக் கட்சி இனிமேல் உரிமை கோரமுடியாது.
அந்தக் கட்சி இப்போது தனித்து விடப் பட்டுள்ளது. தனி ஒரு கட்சி கூட்டமைப் பாக முடியாது-என்றார்.