தேர்தல் கள நிலவரத்தில் பாரியளவு மாற்றம் ஏற்பட்டுள்ளது.
தேர்தல் அறிவிக்கப்பட்ட போது பாராளுமன்றில் மூன்றில் இரண்டை அநுர பெறுவார் என்ற நிலமை இருந்தது.
பிறகு அநுர அலை குறையத் தொடங்கியதும் அறுதிப் பெரும்பான்மை கிடைக்காது, ஆனால் ஆட்சி அமைக்கும் அதிகாரம் கிடைக்கும் நிலை வந்தது.
வேட்பாளர்களின் தெரிவின் பின் பாராளுமன்றில் பெரும்பான்மை என்பதுகூட கேள்விக்குறி ஆகியுள்ளதாக களநிலவரங்கள் சொல்கின்றன. குறிப்பாக அநுர ஜனாதிபதி தேர்தலில் தோல்வியுற்ற இடங்களில் திருகோணமலையைத் தவிர வேறு எங்கேயும் ஒரு சீட் கிடைப்பது கூட சந்தேகமாகி உள்ளது. ஜனாதிபதி தேர்தலின் போது திசைகாட்டிக்காக குரல் கொடுத்த பலரும், தங்கள் பிரதேசத்தில் தெரிவுசெய்யப்பட்ட வேட்பாளர்களைப் பார்த்த பின் மீண்டும் உள்ளூர் பழைய அரசியல்வாதிகளே பரவாயில்லை என்று மாறிவிட்டனர்.
மட்டக்களப்பில் ஒரு வேட்பாளர் கூட 5000 வாக்குகளைக் தாண்டுவது கடினமான அளவு வேட்பாளர் தெரிவு உள்ளது. வடக்கிலும் இதே நிலைதான். வடகிழக்கில் மட்டுமல்ல சிங்கள பகுதிகளிலும் இதே நிலைதான். பல இடங்களில் NPP யிற்குள்ளேயே அடிபாடுகள் தொடங்கி விட்டது.
NPP என்பது நிறைய அமைப்புக்கள் சேர்ந்தது. அதில் ஜே.வி.பி ஒரு அமைப்பு. அநுரவுக்கு இப்போது இருக்கும் பெரிய சிக்கல் , அத்தனை அமைப்புக்களும் ஒன்றாக இருப்பதை உறுதி செய்வது. ஒரு அமைப்பு உடைத்துக்கொண்டு வெளியேறினாலே போதும் அத்தனையும் குழம்பி விடும். அதனால்தான் அநூரவோ , ஜேவிபி யோ வேட்பாளர் தேர்வில் எந்த ஈடுபாட்டையும் காட்ட முடியாமல் போனது.
நிலமை இப்படியே போனால் தொங்கு பாராளுமன்றமே அமையலாம். அப்போது அநூரவுக்கு மற்ற எம்பிக்களின் தேவை வரலாம். அதனால்தான் அரசியல் வாதிகளின் ஊழல்கள், பார் லைசன்ஸ் போன்றவை கிடப்பில் போடப்பட்டுள்ளது.
இப்போதைக்கு , வெல்லக்கூடிய சாத்தியமுள்ள எந்த கட்சி அரசியல்வாதியையும் பகைத்துக்கொள்ள அநுர விரும்பவில்லை. அநுரவுக்கு பெரும்பான்மை கிடைக்காது போனால், நாடு படு மோசமான நிலைக்குப் போகலாம். அதனால் சிங்கள புத்தி ஜீவிகள் தேசிய அரசாங்கம் பற்றி இப்போதே சிந்திக்கத் தொடங்கி விட்டனர். இன்னொரு பக்கம் , அநூர தன் நிறைவேற்று அதிகாரத்தை பயன்படுத்தி பெரிய விடயம் ஏதாவதை செய்து பழையபடி அநுர அலையை ஏற்படுத்த வேண்டும் என்பது பற்றியும் சிந்திக்கிறார்கள்.