2023/2024 சாதாரண தரப் பெறுபேறுகளின் அடிப்படையில் எதிர்வரும் 31ஆம் திகதி வரை உயர்தர நிபுணத்துவப் பிரிவுக்கு மாணவர்கள் சேர்த்துக்கொள்ளப்படுவார்கள் என கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.
கடந்த வருடங்களில் உள்வாங்கப்பட்ட மாணவர்களின் எண்ணிக்கையைக் காட்டிலும் கூடுதலான மாணவர்களை தொழிற்கல்வி பாடத்துக்கான ஆர்வத்தை அதிகரிப்பதற்கான திட்டத்தை தயாரிக்குமாறு வலயக் கல்வி அலுவலகங்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளதாக அமைச்சு தெரிவித்துள்ளது.
மேலும், கல்வி அமைச்சு 2024/2025 கல்வியாண்டுக்கான உயர்தர தொழில்முறை பாடப்பிரிவுக்காக 12ஆம் தரத்துக்கு மாணவர்களை அனுமதிப்பது மற்றும் பாடநெறியின் கல்வி நடவடிக்கைகளை நடைமுறைப்படுத்துவது தொடர்பாக அனைத்து அதிபர்களுக்கும் கடிதம் அனுப்பியுள்ளதாகவும் தெரிவித்துள்ளது.
இதேவேளை, 2025 ஆம் ஆண்டுக்கான பாதீட்டில் மாணவர்களுக்கான கொடுப்பனவுகள் தொடர்பில் கவனம் செலுத்தியுள்ளது.
அந்த வகையில், அடுத்த வருடத்தின் பெப்ரவரி அல்லது மார்ச் மாதத்தில் 2025 ஆம் ஆண்டுக்கான பாதீடு சமர்ப்பிக்கப்படும் எனவும், அரச பணியாளர்களுக்கான வேதன அதிகரிப்பு மற்றும் பாடசாலை மாணவர்களுக்கு வழங்கப்பட வேண்டிய கொடுப்பனவுகள் தொடர்பில் கவனம் செலுத்தப்படவுள்ளதாகவும் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தெரிவித்துள்ளார். ளமை குறிப்பிடத்தக்கது.