மட்டக்களப்பு மாவட்டத்திலே ஜக்கிய மக்கள் சக்தியில் தேர்தலில் போட்டியிடுகின்ற ஒரு சமூகத்திற்கு ஒரு ஆசனம் கிடைத்தால் அடுத்த சமூகத்தைச் சேர்ந்தவருக்கு தேசியபட்டியல் வழங்குவதாக சஜித் பிரேமதாஸ தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் தீர்மானம் எடுக்கப்பட்டது எனவே மாவட்டம் வெல்லுமாக இருந்தால் இரண்டு உறுப்பினர்களை பெற்றுக் கொள்ளமுடியும் இதன் மூலம் தமிழ், முஸ்லிம் உறவுகளும் ஒன்றித்து பயணிக்கமுடியும் என்ற பலமான எதிர்பார்ப்பு இருக்கின்றது என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும் ஜக்கிய மக்கள் சக்தி வேட்பாளருமான அமீர் அலி தெரிவித்தார்.
முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் அமீர் அலியின் ஓட்டுமாவடியில் உள்ள அவரது காரியாலயத்தில் நேற்று சனிக்கிழமை(19) இடம்பெற்ற ஊடக மாநாட்டில் அவர் இவ்வாறு தெரிவித்தார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,
ஜக்கிய மக்கள் சக்தி சார்பாக நானும் கிழக்கு மாகாண முன்னாள் சுகாதார அமைச்சர் சுஹைர், முன்னாள் பிரதி அமைச்சர் கணேசமூர்த்தி, முன்னாள் ஆரையம்பதி பிரதேசசபை தவிசாளர் தயானந்தன், முன்னாள் ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன அமைப்பாளர் சந்திரகுமார், காத்தான்குடி முஜீப், நகுலேஸ்வரன் உட்பட 8 பேர் இணைந்து வெல்லவேண்டும் என எதிர்பார்கின்றோம்.
ஒரு தமிழ், முஸ்லிம் உறவை கட்டியொழுப்பும் நோக்கத்தோடும் எதிர்காலத்தில் இந்த தொடர் நிகழ்சிகள் மூலமாக வடகிழக்கிலே இருக்கின்ற இரு சமூகமூம் ஒன்றினைந்து பயணிக்க வேண்டும் என்ற ஒரு முன் ஏற்பாடாக இதை பார்கின்றேன்
சஜித் பிரேமதாஸ ஒரு சமூகத்திற்கு ஒரு ஆசனம் கிடைத்தால் அடுத்த சமூகத்தைச் சேர்ந்தவருக்கு தேசியபட்டியலில் வழங்குவதாக எடுத்த தீர்மானம் இருக்கின்ற சமயத்திலும் மாவட்டத்திலுள்ள உறவுகளிடம் கேட்பது எந்தவித பிரச்சனைகளும் இல்லாமல் முஸ்லிம் உறுப்பினர் நாடாளுமன்றம் போகின்றார் என்ற குற்றச்சாட்டை தமிழ் உறவுகளில் சுமத்திக் கொள்ளாமல் நேர்மையாகவும் நியாயமாகவும் அந்த வாய்ப்பை கொடுத்தால் இரண்டு நாடாளுமன்ற உறுப்பினரை பெறக்கூடியதாக இருக்கும்.
முன்னாள் பிரதி அமைச்சர் கணேசமூர்த்தி நாடாளுமன்றம் தெரிவாகியபோது முஸ்லிம் சமூகத்தில் இருந்து சாதி சமயம் பாராது கணிசமான வாக்குகளை கொடுத்து அவரை பிரதி அமைச்சராக்கி அழகுபார்த்தார்கள்.
மாவட்டத்தில் 3 இலச்சத்துக்கு மேற்பட்ட தமிழ் வாக்குகள் இருந்தபோதும் கணேசமூர்த்தியே அல்லது ஜக்கிய மக்கள் சகத்தியில் போட்டியிடும் தமிழர் ஒருவருக்கு 20 ஆயிரம் விருப்பு வாக்குகளை அளிப்பீர்களாயின் அவர்களை இலகுவாக நாடாளுமன்றம் அனுப்ப முடியும் அவ்வாறு தைரியம் இல்லாமல் முகநூல் மூலமாக அருவருப்பாக இரு சமூகத்தையும் பிளவு படுத்துகின்ற கருத்துக்களை செய்வதை உங்களது அறிவின் ஆழத்தை கண்டுகொள்கின்றோம்.
கல்குடாவில் ஏ.டபிள்யூ தெய்வநாயகம் ஜயா தொடர்சியாக நாடாளுமன்றம் முடியும் வரை கல்குடா முஸ்லிம் வாக்குகளால் நாடாளுமன்ற உறுப்பினராக தெரிவு செய்யப்பட்டார். இது ஒரு காலகட்டம். இரண்டாவது காலகட்டம் போராட்டம் உச்ச கட்டத்தில் இருந்தபோது முன்னாள் பிரதி அமைச்சர் கணேசமூர்த்தி நாடாளுமன்றம் சென்றது முஸ்லிம் வாக்குகளை கொண்டுதான். எனவே இவைகளை மறந்துவிட்டு முகநூல் மற்றும் துண்டுபிரசுரங்கள் மூலம் இரண்டு சமூகத்தையும் பிரிப்பதற்கான முயற்சிகளை செய்யாதீர்கள்.
முகநூலில் எழுதும் வீரர்களே இரண்டுசமூகத்திற்குள் பிளவுபடுத்துவதை நான் விரும்பவில்லை இருந்தாலும் இரண்டு சமூகமும் ஒன்றினைத்து மாவட்டம் வெல்லுமாக இருந்தால் அதில் தமிழ் ஒன்றும் முஸ்லிம் ஒன்றாக கட்டாயம் இருக்கும்
345 கிராமசேவகர் பிரிவுகளை கொண்ட இந்த மாவட்டத்தில் 4 இலச்சத்து 40 ஆயிரத்துக்கு மேற்பட்ட வாக்காளர்கள் இருக்கின்ற நிலையில் 5 நாடாளுமன்ற உறுப்பினர்களை தெரிவு செய்வதற்கான போட்டியில் இந்தமுறை 392 வேட்பாளர்கள் களமிறங்கியுள்ளனர் இது ஒரு விந்தையான வேடிக்கையான விடையமாக இதை பார்கின்றோம்.
இதில் அதிகமான சுயேச்சைக்குழுக்கள் போட்டியிடுகின்றன. இருந்தபோதும் தேர்தல்வரும் போது அதுக்கென ஒரு அணியினர் இருக்கின்றனர் அவர்கள் பாக்கை தோளில் போட்டுக் கொண்டு சுயேச்சைக் குழுவாக களமிறங்கி நாங்களும் இந்த மாவட்டத்தில் இருக்கின்றோம் என்ற செய்தியை சொல்லவேண்டும் என முனைவோர். அரசியலை செய்ய வேண்டும் என்பதற்கு அந்த பிரதேசத்தில் செல்வாக்கு செலுத்துகின்ற கட்சியோடு சேர்ந்து போக முடியாது என்ற பக்குவ மனநிலை அவர்களிடம் இல்லை
இந்த மனநிலைதான் இவர்களை சுயேச்சைக்கழுவிற்கு அழைத்து செல்கின்றது. இது மட்டக்களப்பு மாவட்டத்தை பொறுத்தமட்டில் பாரிய புற்றுநோயாக பார்ப்பதேடு, மக்களுடைய வாக்குகளை கொஞ்சம் கொஞ்சமாக சிதறடித்து ஒரு நல்ல வேட்பாளரை தெரிவு செய்கின்ற விடையமும் எங்களுக்கு இவ்வளவு பணம் தந்தால் போட்டியில் இருந்து விலகுவதாக ஒரு தொழிலாக செய்கின்ற சுயேச்சைக் குழுக்களும் இருக்கின்றது
எனவே இதை விந்தையான விடையமாக பார்கின்றோம். அதேவேளை எதிர்காலத்திலே இந்த விடையம் சரியாக கையாளப்படவேண்டும் இதற்காக இறுக்கமான சட்டம் கொண்டுவரப்படவேண்டும். அதேவேளை நான் நாடாளுமன்றம் சென்றால் இதற்கான அதிகமான பங்களிப்பு செய்யமுடியும்-என்றார்.