மட்டக்களப்பு கல்குடா கல்வி வலயத்தின் ஆலங்குளம் அரசினர் தமிழ் கலவன் பாடசாலையின் வைரவிழாவினை முன்னிட்டு, “ஆலங்குளம் ” என்னும் சிறப்பு மலர் வெளியீடும், பரிசளிப்பு விழாவும் வெகு சிறப்பாக நடைபெற்றது.
இவ் நிகழ்வானது பாடசாலை ஆரம்பித்து 60 ஆண்டுகளின் பின் அதிபர் இ.ரவிச்சந்திரன் தலைமையில் நடைபெற்ற பாடசாலை வராலாற்றில் தடம்பதித்த முதன் நிகழ்வாகும்.
இன்றைய (20) நிகழ்வின்போது அதிதிகள் அனைவரும் மலர் மாலை அணிவித்து மாணவர்களின் கோலாட்ட நிகழ்வுடன் வரவேற்கப்பட்டனர். மங்கள விளக்கேற்றலுடன் நிகழ்வுகள் யாவும் ஆரம்பமானது.இதன்போது அதிபர் பாடசாலையின் வராலாறு, மாணவர்களின் கல்வி வளர்சி தொடர்பாகவும் மற்றும் நிகழ்வானது திறன்பட நடாத்துவதற்கு ஒத்துழைப்பு வழங்கிய அனைவருக்கும் தமது நன்றியை தமது தலைமை உரையின்போது தெரிவித்தார்.
இதன் பின்னர் கௌரவ அதிதிகளினால் ஆலங்குளம் சிறப்பு மலர் வெளியீடு செய்து வைக்கப்பட்டது.கற்றல் நடவடிக்கைகளில் பல்வேறு திறமைகளை வெளிப்படுத்திய மாணவர்கள் கௌரவிக்கப்பட்டு பரிசில்களும் நினைவுச் சின்னங்களும் வழங்கி கௌரவிக்கப்பட்டனர்.
பாடசாலை அதிபர், ஆசிரியர்கள், இதழாசிரியர்,பெற்றோர்கள் மற்றும் கௌரவ அதிதிகள் ஆகியோர்கள் பொன்னாடை போர்த்தி நினைவுச்சின்னங்களும் வழங்கி கௌரவிக்கப்பட்டனர்.
இந்நிகழ்வில் கல்குடா கல்வி வலய பிரதிக் கல்விப்பணிப்பாளர் திருமதி எம்.ஏ.றிஸ்மியாபாணு, பிரதிக் கல்வி பணிப்பாளர் (கல்வி அபிவிருத்தி) திரு.நேசகஜேந்திரன், இந்து கலாச்சார உத்தியோகத்தர் நே.பிருந்தாபன், ஓய்வு பெற்ற அதிபர் நா.காளிராஜா ஆகியோர்கள் கலந்து கொண்டனர்.அத்துடன் வலயக் கல்வி அலுவலக ஆசிரிய ஆலோசகர்களும், அண்பிய பாடசாலை அதிபர்கள் மற்றும் பாடசாலை அபிவிருத்தி குழு உறுப்பினர்கள் பெற்றோர்கள் என பலரும் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர். இதற்கான நிதி அனுசரனையை கிண்ணியா ஆலங்கேணியில் அமைந்துள்ள அரிஓம் லக்ஸ்மி நாராயணன் நற்பணி மன்ற ஸ்தாபகரான சிவத்திரு.ரெ.பன்னீர்செல்வம் வழங்கியிருந்தார்.