Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
ரணில் விக்ரமசிங்கவிடம் 11 வாகனங்கள் இருப்பதாக தெரிவிக்கப்படும் செய்தியில் உண்மை இல்லை; சாகல ரத்நாயக்க

ரணில் விக்ரமசிங்கவிடம் 11 வாகனங்கள் இருப்பதாக தெரிவிக்கப்படும் செய்தியில் உண்மை இல்லை; சாகல ரத்நாயக்க

2 years ago
in செய்திகள்

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிடம் அரசாங்க வாகனங்களில் அதிகமானவை மீள ஒப்படைக்கப்பட்டுள்ளன. இன்னும் சில வாகனங்களே இருக்கின்றன. 11 வாகனங்கள் இருப்பதாக தெரிவிக்கப்படும் செய்தியில் உண்மை இல்லை. அதேநேரம் ரணில் விக்ரமசிங்கவின் பாதுகாப்பு பிரிவினரே தங்களின் கடமையை செய்வதற்கு சில உபகரணங்களை அரசாங்கத்திடம் கேட்டிருக்கிறது என புதிய ஜனநாயக முன்னணியின் கொழும்பு மாவட்ட வேட்பாளரும் ஐக்கிய தேசிய கட்சியின் தேசிய அமைப்பாளருமான சாகல ரத்நாயக்க தெரிவித்தார்.

புதிய ஜனநாயக முன்னணி கொழும்பில் ஞாயிற்றுக்கிழமை (20) நடத்திய செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே இவ்வாறு தெரிவித்தார்.

அவர் அங்கு தொடர்ந்து தெரிவிக்கையில்,

ரணில் விக்ரமசிங்கவிடம் அரசாங்கத்தின் 11 வாகனங்கள் இருப்பதாகவும் அதனை உடனடியாக கையளிக்குமாறு தெரிவித்து கடிதம் அனுப்பி இருப்பதாகவும் செய்தி வெளியிடப்பட்டிருக்கிறது. இது தொடர்பில் ரணில் விக்ரமசிங்கவின் பாதுகாப்பு பிரிவினரிடம் கேட்டபோது, அவ்வாறு எந்த கடிதமும் கிடைக்கவில்லை என தெரிவித்தார்கள். ஆனால் ரணில் விக்ரமசிங்கவின் பாதுகாப்புக்காக வழங்கப்பட்டிருந்த வாகனங்களில் அதிகமான வாகனங்களை மீள கையளித்திருக்கிறோம். இன்னும் சில வாகனங்களே இருக்கின்றன. அவை முன்னாள் ஜனாதிபதி என்றவகையில், அரசியலமைப்பின் மூலம் அவர்களுக்கு வழங்கப்படவேண்டிய பாதுகாப்புக்கு தேவையான வாகனங்களே இருக்கின்றன.

அதேநேரம் ரணில் விக்ரமசிங்க 30 குடைகளை கேட்டிருப்பதாக தேசிய மக்கள் சக்தியினர் பிரசாரம் செய்து வருகின்றனர். அதில் எந்த உண்மையும் இல்லை. ரணில் விக்ரமசிங்க எதனையும் கேட்டதில்லை. மாறாக ரணில் விக்ரமசிங்கவுக்கு பாதுகாப்பு வழங்கும் பாதுகாப்பு பிரிவினர் தங்களின் கடமையை செய்வதற்கு சில உபகரணங்களை அரசாங்கத்திடம் கேட்டிருக்கிறது. அது பாதுகாப்பு பிரிவினர் கேட்டிருக்கிறார்களே தவிர ரணில் விக்ரமசிங்க எதனையும் கேட்டதில்லை.

அத்துடன் தேசிய பாதுகாப்பு தொடர்பான முன்னாள் ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலாேசகர் என்றவகையில், அந்த பதவிக்குரிய கொடுப்பனவுகள் மற்றும் நிவாரணங்கள் எனக்கு வழங்கப்பட்டன. தேர்தல் அறிவிக்கப்பட்டதன் பின்னர் அவை எதனையும் நான் பெற்றுக்கொள்ளவில்லை. எனக்கு வழங்கப்பட்டிருந்த வாகனத்தையும் அப்போதே திருப்பிக்கொடுத்தேன் என்றார்.

Tags: BattinaathamnewsSrilankasrilankanews

தொடர்புடையசெய்திகள்

நாளை முதல் பொதுச் சுகாதார பரிசோதகர்கள் தொடர் தொழிற்சங்க நடவடிக்கை
செய்திகள்

நாளை முதல் பொதுச் சுகாதார பரிசோதகர்கள் தொடர் தொழிற்சங்க நடவடிக்கை

August 23, 2026
கொழும்புக்கு வருகிறது மின்சார ரயில்
செய்திகள்

கொழும்புக்கு வருகிறது மின்சார ரயில்

August 23, 2026
முச்சக்கர வண்டி ஓட்டும் வயதை 40 ஆக உயர்த்த திட்டம்
செய்திகள்

முச்சக்கர வண்டி ஓட்டும் வயதை 40 ஆக உயர்த்த திட்டம்

August 23, 2026
கம்பஹா மாவட்ட பள்ளிவாசல்களின் அபிவிருத்திக்கு 10 மில்லியன் நிதி
செய்திகள்

கம்பஹா மாவட்ட பள்ளிவாசல்களின் அபிவிருத்திக்கு 10 மில்லியன் நிதி

August 23, 2026
22-வது அரசியலமைப்புத் திருத்தத்திற்கு சர்வஜன வாக்கெடுப்பு நடத்தக்கோரும் தமிழரசுக் கட்சி
அரசியல்

22-வது அரசியலமைப்புத் திருத்தத்திற்கு சர்வஜன வாக்கெடுப்பு நடத்தக்கோரும் தமிழரசுக் கட்சி

August 23, 2026
கைது செய்ய சென்றபோது பொலிசாரை கடித்த பெண்கள் கைது
செய்திகள்

கைது செய்ய சென்றபோது பொலிசாரை கடித்த பெண்கள் கைது

August 23, 2026
Next Post
400ஐ தாண்டிய தேர்தல் முறைப்பாடுகள்; தேர்தல் ஆணைக்குழு

400ஐ தாண்டிய தேர்தல் முறைப்பாடுகள்; தேர்தல் ஆணைக்குழு

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு
No Result
View All Result
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.