Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
மக்கள் எதிர்ப்புக்கு மத்தியில் யாழ்ப்பாணத்தில் 4 புதிய மதுபானசாலைகள்?

மக்கள் எதிர்ப்புக்கு மத்தியில் யாழ்ப்பாணத்தில் 4 புதிய மதுபானசாலைகள்?

41 minutes ago
in செய்திகள், முக்கிய செய்திகள்

யாழ்ப்பாணம் மாவட்டத்தில் மேலும் நான்கு புதிய மதுபானசாலைகளை ஆரம்பிப்பதற்கான அனுமதிக்கான கட்டணங்கள் சம்பந்தப்பட்ட பிரதேச செயலகங்களில் செலுத்தப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

கடந்த 2024ஆம் ஆண்டு ஆட்சிக் காலத்தில் அரசியல்வாதிகளின் பரிந்துரைகளின் அடிப்படையில் நாடளாவிய ரீதியில் நூற்றுக்கும் மேற்பட்ட புதிய மதுபானசாலை அனுமதிகள் வழங்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

அவ்வாறு வழங்கப்பட்ட சில அனுமதிகள் பின்னர் ஏற்கனவே மதுபான விற்பனையில் ஈடுபட்டு வந்தவர்களிடம் அதிக தொகைக்கு கைமாறியதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்நிலையில், யாழ்ப்பாணம் மாவட்டத்தில் நான்கு பகுதிகளில் புதிய மதுபானசாலைகளை அமைப்பதற்கு எதிராக பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்திருந்தனர். இதனால் சம்பந்தப்பட்ட பிரதேச செயலகங்கள் அனுமதி வழங்குவதில் தயக்கம் காட்டியதைத் தொடர்ந்து, மதுபானசாலை உரிமையாளர்கள் நீதிமன்றத்தை நாடியிருந்தனர்.

குறித்த வழக்குகளில் உரிமையாளர்களுக்கு சாதகமான தீர்ப்புகள் வழங்கப்பட்டதை அடுத்து, மதுபானசாலைகளுக்கான அனுமதிகளை நடைமுறைப்படுத்துவதற்கான கட்டணங்களைச் செலுத்தும் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது.

இதன்படி, சங்கானை, கோப்பாய், தெல்லிப்பளை மற்றும் கரவெட்டி ஆகிய நான்கு பிரதேச செயலாளர் பிரிவுகளில் மூன்று பிரதேச செயலகங்களில் நேற்று கட்டணங்கள் செலுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

மீதமுள்ள பிரதேச செயலகத்திலும் இன்று கட்டணம் செலுத்தப்படலாம் என தகவல்கள் வெளியாகியுள்ளன.

Tags: BatticaloaBatticaloaNewsBattinaathamnewselectioninternationalnewsmattakkalappuseythikalpoliticalnewsSrilankasrilankanewssrilankapolice

தொடர்புடையசெய்திகள்

கிளிநொச்சியில் 17 வயது சிறுமியின் மரணத்திற்கு நீதி கோரி கவனயீர்ப்பு போராட்டம்!
செய்திகள்

கிளிநொச்சியில் 17 வயது சிறுமியின் மரணத்திற்கு நீதி கோரி கவனயீர்ப்பு போராட்டம்!

October 7, 2026
மரண தண்டனையை ரத்து செய்ய முயற்சி; சவூதிக்கு சென்ற இலங்கை சட்டத்தரணிகள் குழு
செய்திகள்

மரண தண்டனையை ரத்து செய்ய முயற்சி; சவூதிக்கு சென்ற இலங்கை சட்டத்தரணிகள் குழு

October 7, 2026
முன்னாள் அமைச்சர் ரோஹித்த போகொல்லாகம கைது!
செய்திகள்

முன்னாள் அமைச்சர் ரோஹித்த போகொல்லாகம கைது!

October 7, 2026
பாடசாலை மாணவர்களை ஏற்ற மறுத்த பேருந்து சாரதி தற்காலிகமாக பணியிடைநீக்கம்!
செய்திகள்

பாடசாலை மாணவர்களை ஏற்ற மறுத்த பேருந்து சாரதி தற்காலிகமாக பணியிடைநீக்கம்!

October 7, 2026
திருமலை சிறைச்சாலையின் உதவி அத்தியட்சகருக்கு விளக்கமறியல்!
செய்திகள்

திருமலை சிறைச்சாலையின் உதவி அத்தியட்சகருக்கு விளக்கமறியல்!

October 7, 2026
ஞானசார தேரரின் வழக்கு ஒத்திவைப்பு!
செய்திகள்

ஞானசார தேரரின் வழக்கு ஒத்திவைப்பு!

October 7, 2026

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு
No Result
View All Result
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.