Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
கிளிநொச்சியில் 17 வயது சிறுமியின் மரணத்திற்கு நீதி கோரி கவனயீர்ப்பு போராட்டம்!

கிளிநொச்சியில் 17 வயது சிறுமியின் மரணத்திற்கு நீதி கோரி கவனயீர்ப்பு போராட்டம்!

50 minutes ago
in செய்திகள், முக்கிய செய்திகள்

கிளிநொச்சி – உருத்திரபுரம் பகுதியில் கடந்த முதலாம் திகதி 17 வயதான சசிதரன் சமரழகி என்ற சிறுமி உயிரிழந்த சம்பவத்திற்கு நீதி கோரி இன்று (07) கவனயீர்ப்பு போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது.

உருத்திரபுரம் பொது அமைப்புக்களின் ஏற்பாட்டில் இடம்பெற்ற இந்தப் போராட்டத்தில், உயிரிழந்த சிறுமியின் மரணத்துக்கு நீதி வழங்க வேண்டும் எனவும், அவர் தனது கடிதத்தில் பெயர் குறிப்பிட்ட நபரை கைது செய்து சட்டத்தின் முன் நிறுத்த வேண்டும் எனவும் கோரிக்கை விடுக்கப்பட்டது.

உயிரிழப்பதற்கு முன்னர் சிறுமி எழுதியதாகக் கூறப்படும் கடிதத்தில், தனது மரணத்துக்கு அயல் வீட்டைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் காரணம் எனவும், தனது புகைப்படத்தைப் பயன்படுத்தி தகாத உறவுக்கு அழைத்ததாகவும் குறிப்பிட்டிருந்ததாக போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் தெரிவித்தனர்.

பழைய மாவட்ட செயலக வளாகத்திற்கு முன்பாக கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டவர்கள், பின்னர் பேரணியாக மாவட்ட செயலகம் வரை சென்றனர்.

இதன்போது, தமது கோரிக்கைகள் அடங்கிய மகஜரை கிளிநொச்சி மாவட்ட மேலதிக அரச அதிபர் நளாயினி இன்பராஜிடம் கையளித்தனர்.

இந்தச் சம்பவம் தொடர்பில் உரிய விசாரணைகளை முன்னெடுத்து, குற்றச்சாட்டுகள் உறுதிப்படுத்தப்பட்டால் சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் போராட்டக்காரர்கள் வலியுறுத்தினர்.

Tags: BatticaloaNewsBattinaathamnewselectioninternationalnewsmattakkalappuseythikalpoliticalnewsSrilankasrilankanewssrilankapolice

தொடர்புடையசெய்திகள்

மக்கள் எதிர்ப்புக்கு மத்தியில் யாழ்ப்பாணத்தில் 4 புதிய மதுபானசாலைகள்?
செய்திகள்

மக்கள் எதிர்ப்புக்கு மத்தியில் யாழ்ப்பாணத்தில் 4 புதிய மதுபானசாலைகள்?

October 7, 2026
மரண தண்டனையை ரத்து செய்ய முயற்சி; சவூதிக்கு சென்ற இலங்கை சட்டத்தரணிகள் குழு
செய்திகள்

மரண தண்டனையை ரத்து செய்ய முயற்சி; சவூதிக்கு சென்ற இலங்கை சட்டத்தரணிகள் குழு

October 7, 2026
முன்னாள் அமைச்சர் ரோஹித்த போகொல்லாகம கைது!
செய்திகள்

முன்னாள் அமைச்சர் ரோஹித்த போகொல்லாகம கைது!

October 7, 2026
பாடசாலை மாணவர்களை ஏற்ற மறுத்த பேருந்து சாரதி தற்காலிகமாக பணியிடைநீக்கம்!
செய்திகள்

பாடசாலை மாணவர்களை ஏற்ற மறுத்த பேருந்து சாரதி தற்காலிகமாக பணியிடைநீக்கம்!

October 7, 2026
திருமலை சிறைச்சாலையின் உதவி அத்தியட்சகருக்கு விளக்கமறியல்!
செய்திகள்

திருமலை சிறைச்சாலையின் உதவி அத்தியட்சகருக்கு விளக்கமறியல்!

October 7, 2026
ஞானசார தேரரின் வழக்கு ஒத்திவைப்பு!
செய்திகள்

ஞானசார தேரரின் வழக்கு ஒத்திவைப்பு!

October 7, 2026
Next Post
மக்கள் எதிர்ப்புக்கு மத்தியில் யாழ்ப்பாணத்தில் 4 புதிய மதுபானசாலைகள்?

மக்கள் எதிர்ப்புக்கு மத்தியில் யாழ்ப்பாணத்தில் 4 புதிய மதுபானசாலைகள்?

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு