கரையோரப் புகையிரதத்தின் வஸ்கடுவ பகுதியில் தண்டவாளம் நேற்று (23) வெடித்துள்ளது.
களுத்துறையில் இருந்து கொழும்புக்கு செல்லும் மேல் பாதையின் 25 மைல் மற்றும் 20 சங்கிலி இணைப்பில் தண்டவாளத்தின் ஒரு பகுதியில் வெடிப்பு ஏற்பட்டுள்ளதை வஸ்கடுவ பகுதியை சேர்ந்த இரண்டு இளைஞர்கள் பார்த்துள்ளனர்.
இந்த விடயம் குறித்து இரு இளைஞர்கள் முன்கூட்டியே அறியத்தந்தமையினால் பாரிய விபத்து தடுக்கப்பட்டதாக வடுவ புகையிரதப் பிரிவு தெரிவித்துள்ளது.