Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
யாழ் பல்கலைக்கழக கலைப்பீட மாணவர்களை அச்சுறுத்தினாரா பீடாதிபதி?

யாழ் பல்கலைக்கழக கலைப்பீட மாணவர்களை அச்சுறுத்தினாரா பீடாதிபதி?

2 years ago
in செய்திகள்

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் போராட்டத்திற்கு அழைப்பு விடுத்த கலைப்பீட மாணவ பிரதிநிதிகளை விசாரணைகளிற்கு அழைத்து கலைப்பீட பீடாதிபதி பேராசிரியர் சி.ரகுராம் மாணவர்களை எச்சரிக்கை செய்து அச்சுறுத்தியுள்ளதாகத் தெரிய வருகிறது.

கலைப்பீடத்தின் முதலாம் வருட மாணவர்களுக்கான பாடங்களைத் தெரிவுசெய்வதில் 150 இற்கும் மேற்பட்ட மாணவர்களிற்கு மாணவர்கள் விரும்பிய பாடங்கள் கிடைக்கவில்லை. என்று தங்களுக்குரிய பாடங்களை தருமாறு முன்வைத்த கோரிக்கைகள் பலனளிக்காத நிலையில் மாணவர்கள் போராடுவதற்கு அழைப்பு விடுத்துள்ளனர்.

இவ் அழைப்பினை தங்கள் வாட்ஸப் குழுக்களில் கருத்தாக பதிவிட்ட மாணவர்கள் மீது போராடுவது பல்கலைக்கழக விதிகளுக்கு எதிரானது, அவ்வாறு போராடுவதாக கூறி பதிவிட்ட மாணவர்களை கலைப்பீட பீடாதிபதி சி.ரகுராம் அச்சுறுத்தும் வகையில் மாணவர்கள் உள்ள வாட்ஸப் குழுவில் செய்தியொன்று பதிவிட்டுள்ளார்.

போராடுவதற்கு அழைத்த மாணவர் பிரதிநிதிகளும் இன்றைய தினம் ஒழுக்காற்று விசாரணைகளிற்கு அழைக்கப்பட்டுள்ளனர். அத்துடன் அலுலவக நேரம் இல்லாத இரவு வேளையில் அழைப்பு மேற்கொண்டு, நாளை (இன்று) காலை விசாரணைகளுக்கு வருமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. அலுவலக நேரம் தவிர்ந்த ஏனைய நேரங்களில் இவ்வாறான விசாரணை அறிவிப்பு விடுத்தது முறையற்ற ஒரு செயலாக பார்க்கப்படுகிறது.

கல்வி உரிமை கேட்டுப் போய், போராடுவதற்கே உரிமை கேட்கும் நிலை ஏற்பட்டுள்ளதாக யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் மாணவர்கள் விசனம் தெரிவித்துள்ளனர். இது குறித்து யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தை தொடர்புகொண்டு கேட்டபோது, இவ்வாறு ஒரு முறைப்பாடு கிடைத்ததாகவும் அது குறித்து விசாரணை நடாத்துவதாகவும் தெரிவித்தனர்.

அதே சமயம் இந்த விசாரணைகளுக்கு அழைக்கப்பட்ட மாணவர்களிடம் எவ்விதமான விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. எனவும் இவ் விடயம் தொடர்பில் மேலதிக விபரங்கள் அறிய முடியவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.

Tags: BattinaathamnewsSrilankasrilankanews

தொடர்புடையசெய்திகள்

அவசர நேரங்களில் பொலிஸாரை உடனடியாக தொடர்புகொள்ள புதிய செயலி அறிமுகம்!
செய்திகள்

அவசர நேரங்களில் பொலிஸாரை உடனடியாக தொடர்புகொள்ள புதிய செயலி அறிமுகம்!

September 15, 2026
மதுபோதையில் வாகனம் செலுத்துபவர்களை கண்டறியும் சோதனை தீவிரம்!
செய்திகள்

மதுபோதையில் வாகனம் செலுத்துபவர்களை கண்டறியும் சோதனை தீவிரம்!

September 15, 2026
மயிலத்தமடு,மாதவனை கால்நடை பண்ணையாளர்கள் சித்தாண்டியில் தீப்பந்தத்தினை எரித்து போராட்டம்
காணொளிகள்

மயிலத்தமடு,மாதவனை கால்நடை பண்ணையாளர்கள் சித்தாண்டியில் தீப்பந்தத்தினை எரித்து போராட்டம்

September 15, 2026
கொழும்பு தேசிய வைத்தியசாலை பணிப்பாளருக்கு நீதிமன்ற அழைப்பாணை
செய்திகள்

கொழும்பு தேசிய வைத்தியசாலை பணிப்பாளருக்கு நீதிமன்ற அழைப்பாணை

September 15, 2026
மட்டக்களப்பு வின்சென்ட் மகளிர் உயர்தரப் பாடசாலைக்கு புதிய அதிபர் நியமனம்!
செய்திகள்

மட்டக்களப்பு வின்சென்ட் மகளிர் உயர்தரப் பாடசாலைக்கு புதிய அதிபர் நியமனம்!

September 15, 2026
அர்ச்சுனா இராமநாதனின் ஒத்துழைப்புடன் வடகிழக்கில் அரசியல் அதிகாரம் கைப்பற்றப்படும்; மொட்டு
செய்திகள்

அர்ச்சுனா இராமநாதனின் ஒத்துழைப்புடன் வடகிழக்கில் அரசியல் அதிகாரம் கைப்பற்றப்படும்; மொட்டு

September 15, 2026
Next Post
யாழில் பாடசாலை மாணவர்களை இலக்கு வைத்து போதைப்பொருள் விற்பனை

யாழில் பாடசாலை மாணவர்களை இலக்கு வைத்து போதைப்பொருள் விற்பனை

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு