Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
மட்டக்களப்பில் ஆக்டிவ் டெக் நெட்வொர்க் கேம்பஸின் முதலாவது வருடாந்த பட்டமளிப்பு விழா

மட்டக்களப்பில் ஆக்டிவ் டெக் நெட்வொர்க் கேம்பஸின் முதலாவது வருடாந்த பட்டமளிப்பு விழா

2 years ago
in செய்திகள், மட்டு செய்திகள்

மட்டக்களப்பில் அமைந்துள்ள ஆக்டிவ் டெக் நெட்வொர்க் கேம்பஸ் (ACTIVE TECH NETWORK CAMPUS) யினது முதலாவது வருடாந்த பட்டமளிப்பு விழாவானது கடந்த (19) ஆம் திகதி நடைபெற்றிருந்தது.

இந்நிகழ்வின் ஆரம்பமாக தீபம் ஏற்றப்பட்டு, நாட்டின் தேசியகீதமும் இசைக்கப்பட்டது. அதனை தொடர்ந்து நாட்டிய கலைஞர்களது பரத நாட்டிய நிகழ்வும் இடம்பெற்றிருந்து.

அதனை தொடர்ந்து மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் நிறுவனத்தின் தெற்காசிய மண்டலத்தின் அதிபர் திரு. மனோகரராஜா விக்னராஜ் அவர்களினால் விசேட உரை நிகழ்த்தப்பட்டது. அதில் அவர் மாணவர்களுக்கு தகவல் தொழில்நுட்ப துறையில் எவ்வாறு சாதனைகள் புரிய வேண்டும் மற்றும் எதிர்காலம் எதனை நோக்கி இருக்கின்றது என்பதனையும் தெளிவுப்படுத்தியிருந்தார்.

அத்துடன் தங்களது நிறுவனத்தில் சுமார் 45 பட்டதாரிகளுக்கு உடனடி வேலை வாய்ப்பு வழங்குவதாக தெரிவித்தார். உதவி மேலாளர் தினேஷ் அவர்களின் வேண்டுதலின்படி தாங்கள் இவர்களுக்கு வேலை வாய்ப்பு தருவதாக அவர் கூறியதுடன், அதற்கு வளாகத்தின் (campus) உதவி மேலாளர் உடனடி நடவடிக்கை எடுப்பார் என்றும் தெரிவித்திருந்தார்.’

இதனடிப்படையில் 35 மாணவர்களின் சுயவிபரக் கோவைகள் மட்டக்களப்பு டெலிகொம் மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனம் ஏற்றுக்கொள்ளவுள்ளதாகவும் அவர் தெரிவித்தார். திரு.லிங்கராஜா ஜெகதீசன் (மேலாளர் ஸ்ரீலங்கா டெலிகொம்) அவர்கள் தங்களது நிறுவனத்திற்கு சுமார் 15 பட்டதாரிகளுக்கு வேலை வாய்ப்பு பெற்று தருவதாகவும் குறிப்பிட்டிருந்தார்.

இது தொடர்பாக வளாகத்தின் (CAMPUS) உதவி மேலாரிடம் மாணவர்களது சுயவிபரக் கோவைகளை தங்களிடம் சமர்பிக்கும்படியும் அதனை தொடர்ந்து மேற்கட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படும் எனவும் குறிப்பிட்டிருந்தனர்.

அதனைத் தொடர்ந்து பல்கலைகழக விரிவுரையாளர் திரு. ஹர்ஸான் அவர்கள் பெற்றோர்கள், பிள்ளைகள் மீது வைக்க வேண்டிய நம்பிக்கை தொடர்பான விடயங்கள் பற்றியும், பிள்ளைகள் பெற்றோர்களின் நம்பிக்கைகளை எவ்வாறு பாதுகாக்க வேண்டும் மற்றும் தொடர்பாடல் துறையில் புரியக்கூடிய சாதனைகள் குறித்தும் விளக்கமளித்திருந்தார்.

இவர்களின் உரைகளின் பின் அடுத்த நிகழ்வாக மாணவர்களின் பட்டமளிப்பு நிகழ்வு ஆரம்பமானதுடன், சிறப்பு பெறுபேறுகளை பெற்ற மாணவர்களுக்கு சான்றிதழ்களோடு இணைந்து நினைவு சின்னங்கள் வழங்கி கௌரவிக்கப்பட்டனர்.

சான்றுதலை பெற்ற மாணவர்களுக்கு விழாவின்போதே வேலைபெற்று தருவது மிகச்சிறந்த விடயமாக காணப்பட்டதும், இது பெற்றோரின் மத்தியில் நல்ல வரவேற்பையும் பெற்றுள்ளதாகவும் பெற்றோர் ஒருவர் கருத்து தெரிவித்திருந்தார்.

அதேசமயம் இந் நிகழ்வின் விஷேட அதிதிகளாக திரு.கே.ஹரிஹரராஜ் – பிரதிக் கல்விப் பணிப்பாளர் (வலய மட்டக்களப்பு) திரு.லிங்கராஜா ஜெகதீசன் – மேலாளர் ஸ்ரீலங்கா டெலிகொம் (மட்டக்களப்பு)
திருமதி தவத்திருமகள் உதயகுமார் – அதிபர் வின்சென்ட் பெண்கள் உயர்தரப் பாடசாலை (மட்டக்களப்பு)
திரு. ஏ.பி. ஜோசப் – அதிபர் புனித மைக்கல் கல்லூரி தேசிய பாடசாலை (மட்டக்களப்பு) மற்றும்
திரு. மனோகரராஜா விக்னராஜ் – principal network reliability engineer (Microsoft south Asian zonal )
ஆகியோர் கலந்துகொண்டிருந்தமை மேலும் குறிப்பிடத்தக்கது.

Tags: BattinaathamnewsSrilankasrilankanews

தொடர்புடையசெய்திகள்

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் புதிய தவிசாளராக ஹிஸ்புல்லாஹ் தெரிவு
அரசியல்

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் புதிய தவிசாளராக ஹிஸ்புல்லாஹ் தெரிவு

September 15, 2026
பிள்ளையான் உள்ளிட்ட மூவருக்கு செப்டம்பர் 29 வரை விளக்கமறியல்
செய்திகள்

பிள்ளையான் உள்ளிட்ட மூவருக்கு செப்டம்பர் 29 வரை விளக்கமறியல்

September 15, 2026
மட்டக்களப்பு பழைய கல்லடி பாலத்தில் இருந்து குதித்த இளைஞர்
செய்திகள்

மட்டக்களப்பு பழைய கல்லடி பாலத்தில் இருந்து குதித்த இளைஞர்

September 15, 2026
அவசர நேரங்களில் பொலிஸாரை உடனடியாக தொடர்புகொள்ள புதிய செயலி அறிமுகம்!
செய்திகள்

அவசர நேரங்களில் பொலிஸாரை உடனடியாக தொடர்புகொள்ள புதிய செயலி அறிமுகம்!

September 15, 2026
மதுபோதையில் வாகனம் செலுத்துபவர்களை கண்டறியும் சோதனை தீவிரம்!
செய்திகள்

மதுபோதையில் வாகனம் செலுத்துபவர்களை கண்டறியும் சோதனை தீவிரம்!

September 15, 2026
மயிலத்தமடு,மாதவனை கால்நடை பண்ணையாளர்கள் சித்தாண்டியில் தீப்பந்தத்தினை எரித்து போராட்டம்
காணொளிகள்

மயிலத்தமடு,மாதவனை கால்நடை பண்ணையாளர்கள் சித்தாண்டியில் தீப்பந்தத்தினை எரித்து போராட்டம்

September 15, 2026
Next Post
கிழக்கு மாகாண ஆளுநருடன் திருமலை உள்ளூராட்சி மன்றங்களின் செயலாளர்கள் சந்திப்பு

கிழக்கு மாகாண ஆளுநருடன் திருமலை உள்ளூராட்சி மன்றங்களின் செயலாளர்கள் சந்திப்பு

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு
No Result
View All Result
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.