Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
ஓட்டமாவடி பாடசாலையின் பாதுகாப்பு உத்தியோகத்தர் மற்றும் மாணவ தலைவர்களுக்கு அச்சுறுத்தல் விடுத்த வேட்பாளருக்கு எதிராக பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு

ஓட்டமாவடி பாடசாலையின் பாதுகாப்பு உத்தியோகத்தர் மற்றும் மாணவ தலைவர்களுக்கு அச்சுறுத்தல் விடுத்த வேட்பாளருக்கு எதிராக பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு

2 years ago
in செய்திகள், மட்டு செய்திகள், முக்கிய செய்திகள்

மட்டக்களப்பு ஓட்டுமாவடி மத்திய கல்லூரியில் அத்துமீறி உள்நுழைய முற்பட்ட ஒருவரை தடுத்து நிறுத்திய பாதுகாப்பு உத்தியோகத்தர் மற்றும் மாணவ தலைவர்களுக்கு தகாதவார்தை பிரயோகித்து பாடசாலை நடவடிக்கைகளுக்கு அச்சுறுத்தல் விடுத்த கட்சி ஒன்றின் வேட்பாளர் ஒருவருக்கு எதிராக கடந்த சனிக்கிழமை 26 ம் திகதி பொலிஸ் நிலையத்திலும், தேர்தல் உதவி ஆணையாளர் மற்றும் தேர்தல் கண்காணிப்பு அமைப்பான கபே அமைப்பில் பாடசாலை அதிபர் முறைப்பாடு செய்துள்ளார்.

பாடசாலை வழமைபோல காலையில் தேசிய கீதம் இசைத்து மற்றும் காலை கூட்டம் நடத்தப்பட்டு ஆரம்பிக்கப்படும். அப்போது பிந்திவரும் மாணவர்களை காலைக்கூட்டம் முடியும்வரை நிறுத்திவைப்பது வழமையானது.

இந்த நிலையில் சம்பதினமான கடந்த வெள்ளிக்கிழமை காலை பாடசாலை ஆரம்பித்து காலைக் கூட்டம் இடம்பெற்றுக் கொண்டிருந்தபோது குறித்த நபர் அவரது பிள்ளையை பாடசாலைக்கு கொண்டு சென்றுள்ள நிலையில் அங்கு பிந்தி வந்த மாணவர்களை நிறுத்தி வைத்திருந்தனர்.

இதன் போது அங்கு பிந்தி சென்ற அவரது பிள்ளையை உள் செல்ல வேண்டாம் என கூறியபோது, பாடசாலை வளாகத்தினுள் அத்துமீறி உள் நுழைய முற்பட்ட போது அவரை தடுத்து நிறுத்திய பாதுகாப்பு உத்தியோகத்தர் மற்றும் மாணவ தலைவர்களை தகாத வார்த்தை பிரயோகித்து தான் கட்சி ஒன்றின் வேட்பாளர் என தெரிவித்து அச்சுறுத்தல் விடுத்துள்ளார்.

இது தொடர்பாக பாடசாலை கல்வி நடவடிக்கைக்கு அச்றுத்தல் விடுத்த உலக்கை றபீக் என அழைக்கப்படும் வேட்பாளருக்கு எதிராக வாழைச்சேனை பொலிஸ் நிலையத்திலும், மாவட்ட தேர்தல் உதவி ஆணையார் மற்றும் தேர்தல் கண்காணிப்பு அமைப்பான கபே அமைப்புக்கும் பாடசாலை அதிபர் முறைப்பாடு செய்துள்ளார்.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை வாழைச்சேனை பொலிசார் மேற்கொண்டுவருகின்றனர்.

Tags: BattinaathamnewsSrilankasrilankanews

தொடர்புடையசெய்திகள்

போலி கணினித் தரவுகளைப் பயன்படுத்தி 5.96 கோடி ரூபாவுக்கு மேல் மோசடி; தனியார் நிறுவன ஊழியர் CIDயால் கைது!
செய்திகள்

போலி கணினித் தரவுகளைப் பயன்படுத்தி 5.96 கோடி ரூபாவுக்கு மேல் மோசடி; தனியார் நிறுவன ஊழியர் CIDயால் கைது!

October 31, 2026
பொகவந்தலாவையில் நீரோடையிலிருந்து குடும்பஸ்தர் ஒருவரின் சடலம் மீட்பு
செய்திகள்

பொகவந்தலாவையில் நீரோடையிலிருந்து குடும்பஸ்தர் ஒருவரின் சடலம் மீட்பு

October 31, 2026
இலங்கை மீன்வளத்துறை அதிகாரிகளுக்கு 430 மின்சார மோட்டார் சைக்கிள்கள்!
செய்திகள்

இலங்கை மீன்வளத்துறை அதிகாரிகளுக்கு 430 மின்சார மோட்டார் சைக்கிள்கள்!

October 31, 2026
மனைவி, பிள்ளைகள் கண்முன்னே முஸ்லிம் வர்த்தகர் மீது பொலிஸார் தாக்குதல்; நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு!
செய்திகள்

மனைவி, பிள்ளைகள் கண்முன்னே முஸ்லிம் வர்த்தகர் மீது பொலிஸார் தாக்குதல்; நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு!

October 31, 2026
பாடசாலை என்பது பரீட்சைகளில் சித்தியடைவதற்காக மாத்திரம் கல்வி வழங்கும் இடமல்ல!
செய்திகள்

பாடசாலை என்பது பரீட்சைகளில் சித்தியடைவதற்காக மாத்திரம் கல்வி வழங்கும் இடமல்ல!

October 31, 2026
இலங்கையின் மீன்பிடித் தொழிற்துறையை டிஜிட்டல் மயமாக்க FAO ஒத்துழைப்பு!
செய்திகள்

இலங்கையின் மீன்பிடித் தொழிற்துறையை டிஜிட்டல் மயமாக்க FAO ஒத்துழைப்பு!

October 31, 2026
Next Post
இன்றைய வானிலை அறிக்கை

இன்றைய வானிலை அறிக்கை

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு