இந்த உலகம் மனிதன் மிருகங்கள் என பல்வேறுப்பட்ட உயிரினங்கள் வாழ்வதற்கான இடமாகும்.
அந்த வகையில், பூமியில் இயற்கையான இடங்கள் இருப்பது போல ஆபத்தான பகுதிகளும் காணப்படுகின்றது.
ரஷ்யாவின் ஒய்மியாகோன் பகுதி மிகவும் ஆபத்தான பகுதியாக காணப்படுகின்றது.
பூமியில் மிகவும் குளிரான மக்கள் வசிக்கும் இடங்களில் ஒன்றாக இது காணப்படுகின்றது.
ஆர்க்டிக் பகுதிக்கு இணையான குளிர்நிலை இங்கு காணப்படுவதாக கூறப்படுகின்றது.
பிரேசிலில் காணப்படும் நாகத்தீவு என்ற இடமும் மிகவும் ஆபத்தான இடமாக கருதப்படுகின்றது.
நாகத்தீவு என்றும் அழைக்கப்படும் இல்ஹா டா குயிமாடா கிராண்டே, அட்லாண்டிக் பெருங்கடலில் பிரேசில் கடற்கரையில் அமைந்துள்ளது. அதிக விஷமுள்ள கோல்டன் லான்ஸ்ஹெட் பாம்புகளின் தாயகமாக காணப்படுகின்றது. இங்கு ஒரு சதுர மீட்டருக்கு ஒரு பாம்பு இருக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது.
அடுத்ததாக டனகில் பாலைவனம் மிகவும் ஆபத்தான இடமாக பார்க்கப்படுகின்றது.
வடகிழக்கு எத்தியோப்பியா, தெற்கு எரித்திரியா மற்றும் வடமேற்கு டிஜிபூட்டிக்கு இடையே உள்ள அஃபார் முக்கோணத்தில் இந்த பாலைவனம் காணப்படுகின்றது.இதனை அஃபார் பாலைவனம் என்றும் கூறுகிறார்கள்.பூமியின் வெப்பமான மற்றும் விரும்பத்தகாத இடங்களில் இதுவும் ஒன்றாகும்.
வட ஆபிரிக்காவில் அமைந்துள்ள சஹேல் பகுதி
அதன் வறண்ட காலநிலையால் வரையறுக்கப்படுகிறது. மேலும் மிகவும் எளிதாக இந்த பகுதி வறட்சியால் பாதிக்கப்படுவதாக தெரிவிக்கின்றனர். சஹாரா பாலைவனத்தின் தெற்கு கடைக்கோடியில் அமைந்துள்ள இப்பகுதி கடுமையான வறட்சியால் பாதிக்கப்பட்டுள்ளது. இதன் விளைவாக அங்கு பரவலாக பஞ்சம் மற்றும் குறிப்பிடத்தக்க உயிரிழப்புகளும் ஏற்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.