Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
பிரதமர் பதவிக்கு அமைச்சர் பிமல் ரத்நாயக்கவை நியமிப்பதற்கு சில ஆளும் கட்சி எம்.பிக்கள் எதிர்ப்பு

பிரதமர் பதவிக்கு அமைச்சர் பிமல் ரத்நாயக்கவை நியமிப்பதற்கு சில ஆளும் கட்சி எம்.பிக்கள் எதிர்ப்பு

1 year ago
in செய்திகள், முக்கிய செய்திகள்

அமைச்சரவை மறுசீரமைப்பின் போது பிரதமர் பதவிக்கு அமைச்சர் பிமல் ரத்நாயக்கவின் பெயரை மக்கள் விடுதலை முன்னணி பரிந்துரைத்துள்ளது. இதற்கு அமைச்சர்களான சுனில் ஹந்துனெத்தி மற்றும் லால் காந்த ஆகியோர் எதிர்ப்பு தெரிவித்துள்ளதாகவும் அறிய முடிகிறதென பிவிதுரு ஹெல உறுமய கட்சியின் தலைவரும்,முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான உதய கம்மன்பில தெரிவித்துள்ளார்.

சமகால அரசியல் நிலைவரம் குறித்து தனியார் ஊடகத்துடன் இடம்பெற்ற கலந்துரையாடலின் போது மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.

அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது,

மக்கள் விடுதலை முன்னணிக்கும்,தேசிய மக்கள் சக்திக்கும் இடையில் முரண்பாடுகள் ஏதுமில்லை ஆகவே அமைச்சரவையை மறுசீரமைப்பதற்கான அவசியம் கிடையாது என்று கைத்தொழில் அமைச்சர் சுனில் ஹந்துனெத்தி அண்மையில் குறிப்பிட்டுள்ளார்.

அரசாங்கம் ஆட்சிக்கு வந்து ஆறு மாதங்கள் நிறைவடைந்துள்ளது. இந்த ஆறுமாத பயிற்சியை அடிப்படையாகக் கொண்டு அமைச்சரவையை கூட்டு விருப்பத்துடன் மறுசீரமைப்பதற்கு உத்தேசித்துள்ளதாக அமைச்சர் பிமல் ரத்நாயக்க குறிப்பிட்டுள்ளார்.

அமைச்சர் பிமல் ரத்நாயக்க சபைமுதல்வராக பாராளுமன்றத்தில் செயற்படும் விதம் குறித்து எதிர்க்கட்சிகள் மாத்திரமல்ல பாராளுமன்ற உயர் அதிகாரிகளும் அதிருப்தி வெளிப்படுத்தியுள்ளார்.

தான்தோன்றித்தனமான முறையில் செயற்படுவது சபை முதல்வர் பதவிக்கு அழகல்ல, மக்கள் விடுதலை முன்னணிக்கும், தேசிய மக்கள் சக்திக்கும் இடையில் பனிப்போர் தீவிரமடைந்துள்ளது.

இந்த அரசாங்கத்தில் தேசிய மக்கள் சக்தியினர் ஆதிக்கம் கொண்டுள்ளதை மக்கள் விடுதலை முன்னணியின் சிரேஷ்ட உறுப்பினர்கள் எதிர்த்து வருகிறார்கள்.

இவ்வாறான பின்னணியில் தான் அமைச்சரவை மறுசீரமைப்பு குறித்து அவதானம் செலுத்தப்பட்டு, பிரதமர் பதவிக்கு அமைச்சர் பிமல் ரத்நாயக்கவின் பெயர் முன்மொழியப்பட்டுள்ளது.

இதற்கு அமைச்சர்களான சுனில் ஹந்துனெத்தி மற்றும் லால் காந்த ஆகியோர் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்கள். இதனால் தான் அமைச்சரவை மறுசீரமைப்பு என்பதொன்று இல்லை என்று இவர்கள் குறிப்பிட்டுக் கொள்கிறார்கள் என்றார்.

Tags: Battinaathamnewssrilankanews

தொடர்புடையசெய்திகள்

மட்டக்களப்பில் மீன்பிடி அனுமதிக்கு 7 இலட்சம் ரூபா இலஞ்சம்?; அதிகாரிகள் மீது குற்றச்சாட்டு!
காணொளிகள்

மட்டக்களப்பில் மீன்பிடி அனுமதிக்கு 7 இலட்சம் ரூபா இலஞ்சம்?; அதிகாரிகள் மீது குற்றச்சாட்டு!

September 15, 2026
முன்னாள் பொலிஸ் மா அதிபர் தேஷபந்து தென்னகோன் உள்பட மூவர் மனித உரிமை மீறல்; உயர் நீதிமன்றம் தீர்ப்பு!
செய்திகள்

முன்னாள் பொலிஸ் மா அதிபர் தேஷபந்து தென்னகோன் உள்பட மூவர் மனித உரிமை மீறல்; உயர் நீதிமன்றம் தீர்ப்பு!

September 15, 2026
மூன்று வாகனங்கள் ஒன்றுடன் ஒன்று மோதி விபத்து; 5 பேர் காயம்!
செய்திகள்

மூன்று வாகனங்கள் ஒன்றுடன் ஒன்று மோதி விபத்து; 5 பேர் காயம்!

September 15, 2026
மதுபானம் வாங்கிக் கொடுக்கவில்லை; அனுராதபுர கூட்டம் குறித்து சாகர காரியவசம் விளக்கம்!
அரசியல்

மதுபானம் வாங்கிக் கொடுக்கவில்லை; அனுராதபுர கூட்டம் குறித்து சாகர காரியவசம் விளக்கம்!

September 15, 2026
கொழும்பு உள்ளிட்ட 3 மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை!
செய்திகள்

கொழும்பு உள்ளிட்ட 3 மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை!

September 15, 2026
லண்டனில் தமிழ்நாட்டிற்கு ரூ.11,000 கோடி முதலீடு; 7,000 வேலைவாய்ப்பு உருவாக்கம்!
உலக செய்திகள்

லண்டனில் தமிழ்நாட்டிற்கு ரூ.11,000 கோடி முதலீடு; 7,000 வேலைவாய்ப்பு உருவாக்கம்!

September 15, 2026
Next Post
மட்டக்களப்பில் கிழக்கு மாகாண ஊடகவியலாளர்களுக்கான பயிற்சி செயலமர்வு

மட்டக்களப்பில் கிழக்கு மாகாண ஊடகவியலாளர்களுக்கான பயிற்சி செயலமர்வு

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு