Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
அரச மற்றும் தனியார் துறை ஊழியர்களுக்கான தேர்தல் விடுமுறை தொடர்பில் வெளியாகியுள்ள தகவல்

அரச மற்றும் தனியார் துறை ஊழியர்களுக்கான தேர்தல் விடுமுறை தொடர்பில் வெளியாகியுள்ள தகவல்

2 years ago
in செய்திகள், முக்கிய செய்திகள்

எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலில் அரச மற்றும் தனியார் துறை ஊழியர்களுக்கு சம்பளம் அல்லது தனிப்பட்ட விடுப்பு இழப்பு இன்றி வாக்களிக்கக்கூடிய வகையில் விடுமுறை வழங்குவது தொடர்பான விதிமுறைகளை தேர்தல் ஆணைக்குழு அறிவித்துள்ளது.

அரச துறை அதிகாரிகளின் விசேட விடுமுறை குறித்த நிறுவனங்களின் குறியீடு அத்தியாயம் 12, பத்தி 12/3 இல் கூறப்பட்டுள்ளது.

அதன்படி, நாடாளுமன்றத் தேர்தலுக்கு வாக்களிக்க செல்வதற்கு தேவையான ஒரு தொடர்ச்சியான காலம் குறைந்தபட்சம் 4 மணிநேரம் என்றும், சம்பளம் பிடித்தம் செய்யாமல் விசேட விடுமுறை வழங்கப்பட வேண்டும் என்றும் கூறப்பட்டுள்ளது.

மனித உரிமைகள் ஆணைக்குழுவின் அறிவிப்பின் அடிப்படையில் தனியார் துறை ஊழியர்கள் சம்பளம் அல்லது தனிப்பட்ட விடுப்பு இழப்பின்றி வாக்களிக்கும் முறை உருவாக்கப்பட்டுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

அதன்படி, பணியிடத்திலிருந்து வாக்களிப்பு நிலையத்திற்கு 40 கிலோமீற்றர் அல்லது அதற்கும் குறைவான தூரம் இருந்தால் அரை நாள் விடுமுறையும், 40-100 கிலோமீற்றர் வரை இருந்தால் குறைந்தபட்சம் ஒரு நாள் விடுமுறையும் அளிக்க வேண்டும்.

100-150 கிலோமீற்றர் தூரம் என்றால் ஒன்றரை நாட்களும், 150 கிலோமீற்றருக்கு அதிகமாக இருந்தால் 2 நாட்களும் அவகாசம் அளிக்க வேண்டும் என தேர்தல் ஆணைக்குழு கூறியுள்ளது.

இருப்பினும், இதற்காக, பணியாளர்கள் உரிய விடுமுறைக் கோரிக்கையை எழுத்துப்பூர்வமாக நிறுவன தலைவரிடம் வழங்க வேண்டும்.

மேலும், விசேட விடுமுறைக்கு விண்ணப்பித்த நபர்கள் மற்றும் விடுப்புக் காலத்தைக் காட்டும் ஆவணத்தைத் தயாரித்து பணியிடத்தில் காட்சிப்படுத்த வேண்டும் என்று தேர்தல் ஆணைக்குழு நிறுவனங்களின் தலைவர்களிடம் கேட்டுக்கொண்டுள்ளது.

Tags: BattinaathamnewsSrilankasrilankanews

தொடர்புடையசெய்திகள்

போலி கணினித் தரவுகளைப் பயன்படுத்தி 5.96 கோடி ரூபாவுக்கு மேல் மோசடி; தனியார் நிறுவன ஊழியர் CIDயால் கைது!
செய்திகள்

போலி கணினித் தரவுகளைப் பயன்படுத்தி 5.96 கோடி ரூபாவுக்கு மேல் மோசடி; தனியார் நிறுவன ஊழியர் CIDயால் கைது!

October 31, 2026
பொகவந்தலாவையில் நீரோடையிலிருந்து குடும்பஸ்தர் ஒருவரின் சடலம் மீட்பு
செய்திகள்

பொகவந்தலாவையில் நீரோடையிலிருந்து குடும்பஸ்தர் ஒருவரின் சடலம் மீட்பு

October 31, 2026
இலங்கை மீன்வளத்துறை அதிகாரிகளுக்கு 430 மின்சார மோட்டார் சைக்கிள்கள்!
செய்திகள்

இலங்கை மீன்வளத்துறை அதிகாரிகளுக்கு 430 மின்சார மோட்டார் சைக்கிள்கள்!

October 31, 2026
மனைவி, பிள்ளைகள் கண்முன்னே முஸ்லிம் வர்த்தகர் மீது பொலிஸார் தாக்குதல்; நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு!
செய்திகள்

மனைவி, பிள்ளைகள் கண்முன்னே முஸ்லிம் வர்த்தகர் மீது பொலிஸார் தாக்குதல்; நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு!

October 31, 2026
பாடசாலை என்பது பரீட்சைகளில் சித்தியடைவதற்காக மாத்திரம் கல்வி வழங்கும் இடமல்ல!
செய்திகள்

பாடசாலை என்பது பரீட்சைகளில் சித்தியடைவதற்காக மாத்திரம் கல்வி வழங்கும் இடமல்ல!

October 31, 2026
இலங்கையின் மீன்பிடித் தொழிற்துறையை டிஜிட்டல் மயமாக்க FAO ஒத்துழைப்பு!
செய்திகள்

இலங்கையின் மீன்பிடித் தொழிற்துறையை டிஜிட்டல் மயமாக்க FAO ஒத்துழைப்பு!

October 31, 2026
Next Post
வியாழேந்திரனின் தீர்மானத்தை வரவேற்கும் துரைரெட்ணம்

வியாழேந்திரனின் தீர்மானத்தை வரவேற்கும் துரைரெட்ணம்

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு