கடந்த கால மட்டக்களப்பு முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் பிள்ளையான் பாராளமன்றத்தில் சாதித்தவை!
1) 20 ஆம் திருத்த சட்டத்திற்கு ஆதரவாக வாக்களித்தார்.
2) திறைசேரியின் வருமானத்தை ரூபா 600 பில்லியனால் வீழ்ச்சியடைய செய்த வரி சீரமைப்புக்கு ஆதரவாக வாக்களித்தார்.
3) கோட்டாபய ராஜபக்சவின் அவசர கால நிலையை ஒரு மாத காலம் நீடிக்கும் பிரேரணைக்கு ஆதரவாக வாக்களித்தார்.
4) மருத்துவ மாபியா கெஹலிய ரம்புக்வெல்லக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணைக்கு எதிராக வாக்களித்தார்.
5) நிகழ்நிலை காப்பு சட்டத்திற்கு ஆதரவாக வாக்களித்தார்.
6) பாராளுமன்ற சபாநாயகருக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணைக்கு எதிராக வாக்களித்தார்.
7) பாதுகாப்பு அமைச்சு மீதான நிதி ஒதுக்கீடுகளை தொடர்ந்து ஆதரித்து வாக்களித்தார்.
8)தொல்லியல் திணைக்கள நிதி ஒதுக்கீடுகளை ஏற்று அதற்கு ஆதரவாக வாக்களித்தார்.
9) VAT_வரி (Standard) வரியை 15% இலிருந்து 18% ஆக அதிகரித்த சட்டமூலத்திற்கு ஆதரவாக வாக்களித்தார்.
10) சர்ச்சைக்குரிய (Electricity bill) மின்சார கட்டணத்திற்கு ஆதரவாக வாக்களித்தார்.
11) பொருத்தமற்ற உள்நாட்டு கடன் மறுசீரமைப்பு திட்ட முன்மொழிவிற்க்கு ஆதரவாக வாக்களித்தார்.
12) பொதுப் பயன்பாடுகள் ஆணை குழுவின் தலைவர் திரு. ஜனக ரத்நாயக்கவை பதவி நீக்கம் செய்ய முயற்சித்த அரசாங்கத்தின் பிரேரணைக்கு ஆதரவாக வாக்களித்தார்.
அதாவது திருவாளர் பிள்ளையான் ஆட்சியாளர்கள் எதை ஆதரிக்க சொன்னாலும் அதை பற்றி ஆராயாமல் எந்த கேள்வியிமின்றி சகல அத்து மீறல்களுக்கும் ஆதரவாக கண்ணை மூடி கையை தூக்கியதை தவிர பாராளமன்றத்தில் எந்த பங்களிப்பையும் செய்யவில்லை.
பாராளமன்றத்தில் பெரிதும் பங்களிக்காத ஒருவராக (Rank-162) திருவாளர் பிள்ளையான் சேரை பட்டியல்படுத்தி இருக்கிறது.
இது போதாதென்று பாராளுமன்ற செயல்பாடுகளின் அடிப்படையிலான திருவாளர் பிள்ளையானின் Productive Impact Score வெறும் பூச்சியமாக இருக்கின்றது.
இந்த நிலையில் பாராளமன்றத்தில் எதை சாதிப்பதற்கு பிள்ளையான் சேர் மீண்டும் வாக்கு கேட்கின்றார்.
இப்போதாவது குறைந்தபட்சம் 20 ஆம் திருத்த சட்டம்.
கெஹலிய ரம்புக்வெல்லவின் மருத்துவ மாபியா.
இது போன்ற மன்னிக்க முடியாத மிக பாரதூரமான கொடூரங்களுக்கு கை தூக்கி துணைபோன பிள்ளையான் உட்பட எவருக்கும் வாக்களிக்க வேண்டுமா என மக்கள் சிந்தித்து செயற்படவேண்டும்.