Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
”கிழக்கு மீட்பு என்பவர்கள் மற்றும் தேசிய கட்சிகள் என காலத்துக்கு காலம் புதுபுது சின்னங்களில் வருபவர்களை மக்கள் நிராகரிக்கவேண்டும்” ; தியாகராசா சரவணபவன்

”கிழக்கு மீட்பு என்பவர்கள் மற்றும் தேசிய கட்சிகள் என காலத்துக்கு காலம் புதுபுது சின்னங்களில் வருபவர்களை மக்கள் நிராகரிக்கவேண்டும்” ; தியாகராசா சரவணபவன்

2 years ago
in அரசியல், செய்திகள், மட்டு செய்திகள்

”நடைபெறவுள்ள நாடாளுமன்ற தேர்தலில் தபால் மூல வாக்களிப்பில் தமிழரசு கட்சிக்கு 90 வீதத்துக்கு மேற்பட்ட வாக்குகள் அளிக்கப்பட்டுள்ளதாக கருத்துக்கணிப்புக்கள் மூலம் கிடைத்துள்ளது. எனவே கிழக்கு மீட்பு என வந்தவர்கள் தமிழர்களின் சொத்துகள் வளங்கள் பறிபோகும் போது அதனை கைகட்டி வாய்பொத்திய மௌனிகளாக பார்த்துக் கொண்டு நின்றவர்கள் மற்றும் தேசிய கட்சிகள் என காலத்துக்கு காலம் புது புது சின்னங்களில் வருபவர்களை தமிழ் மக்கள் நிராகரிக்க வேண்டும்.” என மட்டக்களப்பு மாநகரசபை முன்னாள் மேயரும் வேட்பாளருமான தியாகராசா சரவணபவன் தெரிவித்தார்.

தமிழரசு கட்சியின் வீட்டுச்சின்னத்தில் 7ம் இலக்கத்தில் தேர்தலில் போட்டியிடும் முன்னாள் மேயரின் கல்லடியிலுள்ள காரியாலயத்தில் நேற்று முன்தினம் (2) இரவு இடம்பெற்ற ஊடகமாநாட்டில் அவர் இவ்வாறு தெரிவித்தார்.

இந்த முறை பொதுமக்கள் மத்தியில் ஒரு எழுச்சி ஏற்பட்டுள்ளதை அவதானிக்க கூடியதாக இருக்கின்றது. அனைவரும் தமிழரசு கட்சிக்கு வாக்களித்து சிறந்த வேட்பாளர்களை தெரிவு செய்வதற்காக முன்வந்துள்ளமை மகிழ்ச்சியான விடயம்.

தேசிய கட்சிகள் தமிழர்களின் நாடாளுமன்ற பிரதிநிதிகளை குறைப்பதற்கான திட்டமே வடக்கு கிழக்கில் அதிகமாக களமிறக்கப்பட்டுள்ளனர் எனவே இத்திட்டத்தை முறியடிக்க தமிழ் மக்கள் அனவரும் ஒன்று திரண்டு தேர்தலில் வாக்குகளை பிரிக்காமல் சிதறவிடாமல் தமிழரசு கட்சிக்கு பலமான ஆதரவளித்து வாக்களித்து அவர்களுக்கு பாடம் புகட்டவேண்டும்.

அதேபோல தமிழ் தேசிய கட்சிகள் என தெரிவித்து காலத்துக்கு காலம் வெவ்வேறு சின்னங்களில் வருபவர்கள் மற்றும் கிழக்கை மீட்போம் என வந்து தமிழர்களின் சொத்துக்கள் வளங்களை சூறையாடியவர்களை நீங்கள் முற்றாக நிராகரிக்க வேண்டும்.

தமிழர்களின் விடுதலை நோக்கி பயணிக்கின்ற தலைமைக்கட்சியான தமிழரசு கட்சி அதிக பிரதிநிதித்துவத்தை பெற்று நாடாளுமன்றத்தில் தீர்மானிக்கும் சக்தியாக மாறுவதற்கு ஒத்துழைப்பு வழங்கும் பட்சத்தில் வரைபு நிலையிலுள்ள புதிய யாப்பை முன்னகர்த்தி எதிர்வரும் நாடாளுமன்றத்தில் தமிழ் பிரச்சினைக்கான தீர்வை வழிவகைகளை கட்சி தலைமை செய்வதற்கு அனைவரும் ஒத்துழைப்பு வழங்கவேண்டும்.

தமிழரசு கட்சியின் கொள்கையாக பிரிக்கப்படாத நாட்டிற்குள் மீளப்பெறப்படாத ஒரு அர்த்தமுள்ள அதிகார பரவாலாக்கங்களை கோரிநிற்கின்றோம். இந்த இலக்கை நோக்கிய பயணமாக எங்களது செயற்பாடு இருக்கும். கிழக்கில் தமிழர்களின் பெருவாரியான ஆதரவை நாங்கள் பெறுவோம். என்பதுடன் வடக்கு,கிழக்கு உட்பட 11 ஆசனங்களை பெறுவோம். என்ற களநிலவரம் இருக்கின்றது எனவே அவ்வாறான ஆசனங்களை பெற்று நாடாளுமன்றத்தில் பேரம் பேசும் கட்சியாக நாங்கள் திகழ்வோம் என்பதில் ஜயமில்லை

எனவே மாவட்டத்தில் தமிழரசு கட்சியின் வீட்டு சின்னத்துக்கும் எனது இலக்கமான 7 ம் இலக்கத்துக்கும் வாக்களித்து என்னையும் நாடாளுமன்றம் அனுப்புவதற்கு முழு ஒத்துழைப்பையும் வழங்குமாறு வேண்டி நிற்கின்றேன் என்றார்.

Tags: BattinaathamnewsSrilankasrilankanews

தொடர்புடையசெய்திகள்

உலக சுற்றுலா தினத்தை முன்னிட்டு ராமர் பாலத்துடன் தொடர்புடைய 3வது மணல் திட்டை நோக்கி பயணம்!
செய்திகள்

உலக சுற்றுலா தினத்தை முன்னிட்டு ராமர் பாலத்துடன் தொடர்புடைய 3வது மணல் திட்டை நோக்கி பயணம்!

September 25, 2026
“ஹோர்முஸ் பாதுகாக்க ஈரானுடன் மோத தயார் பிரான்ஸ் அதிரடி!
உலக செய்திகள்

“ஹோர்முஸ் பாதுகாக்க ஈரானுடன் மோத தயார் பிரான்ஸ் அதிரடி!

September 25, 2026
22ஆவது அரசியலமைப்புத் திருத்தச் சட்டமூலம் 95 மேலதிக வாக்குகளால் பாராளுமன்றில் நிறைவேற்றம்!
செய்திகள்

22ஆவது அரசியலமைப்புத் திருத்தச் சட்டமூலம் 95 மேலதிக வாக்குகளால் பாராளுமன்றில் நிறைவேற்றம்!

September 25, 2026
நாட்டில் மேலும் 20 காடுகளுக்கு பாதுகாப்பு; 9,538 ஹெக்டேயர் வனப்பகுதி வர்த்தமானியில்
செய்திகள்

நாட்டில் மேலும் 20 காடுகளுக்கு பாதுகாப்பு; 9,538 ஹெக்டேயர் வனப்பகுதி வர்த்தமானியில்

September 25, 2026
இலஞ்சம் கொடுக்க முயன்ற முன்னாள் பிரதிமைச்சர் சரண குணவர்தனவின் மனைவி கைது
செய்திகள்

இலஞ்சம் கொடுக்க முயன்ற முன்னாள் பிரதிமைச்சர் சரண குணவர்தனவின் மனைவி கைது

September 25, 2026
நாமல் ராஜபக்ஷவுடன் புகைப்படம் எடுத்த ஆளும் கட்சி எம்.பிக்கள்; பாராளுமன்றத்தில் சர்ச்சை
செய்திகள்

நாமல் ராஜபக்ஷவுடன் புகைப்படம் எடுத்த ஆளும் கட்சி எம்.பிக்கள்; பாராளுமன்றத்தில் சர்ச்சை

September 25, 2026
Next Post
லிட்ரோ, லாஃப்ஸ் எரிவாயுக்களின் விலையில் மாற்றம் இல்லை

லிட்ரோ, லாஃப்ஸ் எரிவாயுக்களின் விலையில் மாற்றம் இல்லை

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு