அடுத்த வருடம் பாடசாலை மாணவர்களுக்குத் தேவையான அனைத்து சீருடைகளையும் வழங்க சீன அரசாங்கம் தயாராக இருப்பதாக இந்நாட்டுக்கான சீனத் தூதுவர் சி ஷென்ஹாங் தெரிவித்துள்ளார்.
கம்பஹா கப்பெட்டிபொல தேசிய பாடசாலையில் இடம்பெற்ற குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களைச் சேர்ந்த பாடசாலை மாணவர்களுக்கு புலமைப்பரிசில் வழங்கும் நிகழ்வில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
பாடசாலை மாணவர்களுக்கான உத்தியோகபூர்வ சீருடைகளில் கடந்த வருடம் 70 வீதத்தையும் இந்த வருடம் 80 வீதத்தையும் சீனா நன்கொடையாக வழங்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இதன்படி, அடுத்த வருடம் பாடசாலை மாணவர்களின் சீருடைகளில் 100 வீதத்தை நன்கொடையாக வழங்க தமது அரசாங்கம் தயாராக இருப்பதாக இந்நாட்டுக்கான சீனத் தூதுவர் சி ஷென் ஹொங் மேலும் தெரிவித்துள்ளார்.