Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
முஸ்லிம் தலைமைகளை அரசியலிலிருந்து ஓரங்கட்ட சதி; ரிஷாட் பதியுதீன்

முஸ்லிம் தலைமைகளை அரசியலிலிருந்து ஓரங்கட்ட சதி; ரிஷாட் பதியுதீன்

2 years ago
in அரசியல், செய்திகள்

முஸ்லிம் தலைமைகளை அரசியலிலிருந்து ஓரங்கட்டும் சதி முயற்சிகளிலிருந்து சமூகம் விழிப்படைய வேண்டும் என அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும் ஐக்கிய மக்கள் கூட்டமைப்பின் வன்னி மாவட்ட முதன்மை வேட்பாளருமான ரிஷாட் பதியுதீன் தெரிவித்தார்.

அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் உலமாக் குழுவின் ஏற்பாட்டில், “சிறுபான்மை பிரதிநிதித்துவமும் உலமாக்களின் பங்களிப்பும்” என்ற கருப்பொருளில், வன்னி மாவட்ட உலமாக்களுக்கான மாநாடு, நேற்று முன்தினம் (03) மன்னாரில் இடம்பெற்றது.

இந்நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே, மக்கள் காங்கிரஸ் தலைவர் ரிஷாட் பதியுதீன் மேற்கண்டவாறு கூறினார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

“தேசிய மக்கள் சக்தி வென்றுவிட்டது என்பதற்காக, முஸ்லிம் பிரதிநிதித்துவங்களை இல்லாதொழிக்க விரும்புகின்றீர்ககளா? பாராளுமன்ற அரசியலில், சமூகங்களுக்கென்று தனித்தனி பிரதிநிதித்துவங்கள் அவசியம். தேசிய அரசியலில் மாற்றம் ஏற்பட்டுள்ளமைக்காக, சமூகங்களின் பிரதிநிதித்துவங்களை இல்லாமற்செய்ய இயலாது. எம்மத்தியில் உள்ள சிலர் இவ்வேலைகளைச் செய்வதற்கு துணிந்துள்ளனர். இந்த சதிகளுக்கு துணைபோயுள்ள நமது சகோதரர்களுக்கு வழிகாட்ட வேண்டிய பொறுப்பு உலமாக்களுக்கும் உள்ளது.

பிரதிநிதித்துவங்கள் இல்லாத சமூகங்கள், திசை தவறும் ஆபத்துக்களை எதிர்கொள்ளலாம். முறையான தலைமைத்துவங்கள் இருந்தபோதும், உணர்ச்சி, எழுச்சிகள் ஏற்பட்டதால், தமிழ் இளைஞர்கள் தவறான வழி சென்ற வரலாறு நமது நாட்டில் உள்ளது. இதனால், ஏற்பட்ட யுத்தம் சகல சமூகங்களையுமே பாதித்திருந்தன. இதுபோன்ற எழுச்சியை, இப்போது ஏற்பட்டுள்ள மாற்றமும் ஏற்படுத்துமோ என நாங்கள் அஞ்சுகின்றோம்.

புத்தளத்தில், ஒரு முஸ்லிம் எம்.பி. வரக்கூடாதென்று முஸ்லிம்களையே சதி செய்யத் தூண்டியுள்ளனர். கொழும்பில் முஜிபுர் ரஹ்மான் வரக்கூடாதா? கண்டியில், ரவூப் ஹக்கீம் வென்றால் இவர்களுக்கென்ன பிரச்சினை. வன்னியில், எனது தலைமைத்துவத்தை வேரறுக்கவும் வியூகங்கள் வகுக்கப்படுகின்றன.

தேசிய கட்சிகளின் கைப்பொம்மைகளாக இருக்கப்போகும் முஸ்லிம் பிரதிநிதித்துவத்தால் எந்தப் பிரயோசனமும் ஏற்படாது. சமூகத்துக்கு ஏதாவது கெடுதிகள் அல்லது ஆபத்துக்கள் ஏற்பட்டால், எங்களால்தான் பேச முடியும். எனவே, எமக்கான பிரதிநிதித்துவங்களை நாமே வென்றெடுக்க வேண்டும்” என்று குறிப்பிட்டுள்ளார்.

Tags: BattinaathamnewsSrilankasrilankanews

தொடர்புடையசெய்திகள்

அரச அதிகாரிகளுக்கு ஒரு சதம் கூட இலஞ்சம் கொடுக்க வேண்டாம்!; லால்காந்த
செய்திகள்

அரச அதிகாரிகளுக்கு ஒரு சதம் கூட இலஞ்சம் கொடுக்க வேண்டாம்!; லால்காந்த

November 1, 2026
பட்டதாரி ஆசிரியர் ஆட்சேர்ப்பு நேர்முகப் பரீட்சை; முக்கிய அறிவிப்பு!
செய்திகள்

பட்டதாரி ஆசிரியர் ஆட்சேர்ப்பு நேர்முகப் பரீட்சை; முக்கிய அறிவிப்பு!

November 1, 2026
2,819 தாதிய உத்தியோகத்தர்களுக்கு இன்று நியமனம் வழங்கி வைப்பு!
செய்திகள்

2,819 தாதிய உத்தியோகத்தர்களுக்கு இன்று நியமனம் வழங்கி வைப்பு!

November 1, 2026
”வீடியோ மூலம் ஆஜராக அனுமதிக்க முடியாதா?”; பசில் ராஜபக்ஷவின் கோரிக்கை நீதிமன்றத்தால் நிராகரிப்பு!
செய்திகள்

”வீடியோ மூலம் ஆஜராக அனுமதிக்க முடியாதா?”; பசில் ராஜபக்ஷவின் கோரிக்கை நீதிமன்றத்தால் நிராகரிப்பு!

November 1, 2026
கடந்த ஒரு வருட காலத்தில் மாத்திரம் 11,970 சிறுவர்கள் போதைப்பொருள் குற்றச்சாட்டில் கைது
செய்திகள்

கடந்த ஒரு வருட காலத்தில் மாத்திரம் 11,970 சிறுவர்கள் போதைப்பொருள் குற்றச்சாட்டில் கைது

November 1, 2026
வங்காள விரிகுடாவில் இன்று ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவடைந்தது
செய்திகள்

வங்காள விரிகுடாவில் இன்று ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவடைந்தது

November 1, 2026
Next Post
நாமல் அனுரவுக்கு ஆதரவு!

நாமல் அனுரவுக்கு ஆதரவு!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு
No Result
View All Result
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.