வெளிநாட்டு கடவுச்சீட்டு டெண்டர் மற்றும் VFS வீசா சம்பவங்கள் தொடர்பில் தடயவியல் தணிக்கை நடத்தப்படும் என பொது பாதுகாப்பு அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார்.
அதில் இடம்பெற்றுள்ள முறைகேடுகளை கண்டறிய கணக்காய்வு நடத்தப்படும் என அமைச்சர் குறிப்பிட்டார்.
அதன் மூலம் உரிய சட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்றும் அமைச்சர் குறிப்பிட்டார்.
அதேசமயம் இந்த மாதத்திற்கு வழங்கவுள்ள கடவுச்சீட்டுக்களின் கட்டுப்பாட்டு எண்ணிக்கை முடிவடைந்துள்ளமையினால் அவசர தேவைகளுக்காக மட்டும் கடவுச்சீட்டு பெற வருமாறு கேட்டுக்கொள்கிறேன் என்றார்