யுத்தத்தில் உயிரிழந்த மக்களுக்கு தனது சொந்தச் செலவில் நினைவுத்தூபி அமைப்பதற்கு தயாரென, முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதன் தெரிவித்தார்.
இது தொடர்பாக அவர் மேலும் தெரிவித்த போது,
“நீண்டகால உள்நாட்டு யுத்தத்தால் எமது நாட்டு மக்கள் பலரை இழந்துள்ளோம். இனங்களுக்கு இடையே புரிந்துணர்வு இன்மை மற்றும் சம உரிமை கிடைக்காமை முதலான காரணங்களால் உள்நாட்டு யுத்தம் உருவாகி அது பலரையும் அழித்து விட்டது.
இந்த யுத்தத்தால் தமிழ் மக்களே அதிகமாக பாதிக்கப்பட்டனர். யுத்தம் முடிந்து 15 வருடங்கள் கடந்த போதிலும் தமிழ் மக்கள் யுத்த வடுவிலிருந்து மீள முடியாமலுள்ளனர். அத்துடன் தமிழ் மக்களுக்கு அவர்களின் உயிரிழந்த உறவுகளை நினைவுகூருவது கூட சவாலாகவே காணப்படுகிறது.