கட்டாய ஹிஜாப் சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து, பல்கலைக்கழக வளாகத்தில் தனது ஆடைகளைக் கலைந்த பெண்ணை காவலில் இருந்து விடுவிக்க வேண்டும்’ என ஈரானின் மனித உரிமை ஆர்வலர்கள் அதிகாரிகளிடம் வலியுறுத்தியுள்ளனர்.
சனிக்கிழமையன்று, டெஹ்ரானின் இஸ்லாமிய ஆசாத் அறிவியல் மற்றும் ஆராய்ச்சி பல்கலைக்கழகத்தின் பிளாக் 01 பகுதியில் நடைபாதையில் ஒரு பெண் தனது உள்ளாடைகளுடன் படிக்கட்டுகளில் அமர்ந்திருப்பதைக் காட்டும் காணொளி சமூக ஊடகங்களில் வெளியானது.
மற்றொரு காணொளியில், அந்தப் பெண் தனது உள்ளாடைகளைக் கலைவது போலக் காட்டப்பட்டுள்ளது, சற்று நேரத்தில் சாதாரண உடையில் இருந்த பாதுகாப்பு அதிகாரிகள் அவரை வலுக்கட்டாயமாகப் பிடித்து காருக்குள் ஏற்றுகின்றார்கள்.
ஏற்கனவே அந்தப் பெண் மனநலம் பாதிக்கப்பட்டு இருந்ததாகவும் அதன் அடிப்படையில் குறித்த பெண்ணை மனநல மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டதாகவும் ஆசாத் பல்கலைக்கழகம் கூறியது.