Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
நாங்கள் சீறினால் மட்டக்களப்பை விட்டு பிள்ளையான் ஓடவேண்டி வரும்; கடும் தொனியில் எச்சரித்த புனர்வாழ்வழிக்கப்பட்ட விடுதலைப்புலிகள் கட்சி

நாங்கள் சீறினால் மட்டக்களப்பை விட்டு பிள்ளையான் ஓடவேண்டி வரும்; கடும் தொனியில் எச்சரித்த புனர்வாழ்வழிக்கப்பட்ட விடுதலைப்புலிகள் கட்சி

2 years ago
in செய்திகள், மட்டு செய்திகள், முக்கிய செய்திகள்

நாங்கள் சீறினால் மட்டக்களப்பை விட்டு பிள்ளையான் ஓடவேண்டி வரும் என புனர்வாழ்வழிக்கப்பட்ட விடுதலைப்புலிகள் கட்சியின் தலைவர் க.இன்பராஜா தெரிவித்துள்ளார்.

பிள்ளையானின் ஆதரவாளர்களினால் தமது வேட்பாளர் மற்றும் அவரது கணவர் தாக்கப்பட்டது தொடர்பில் மட்டு ஊடக அமையத்தில் நேற்று (05) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,

சிவனேசதுரை சந்திரகாந்தன் எங்களுக்கு படம் காட்டக்கூடாது. நாங்கள் புலி. எங்களிடம் செட்டப் காட்டக்கூடாது. பிள்ளையான் அவர்கள் விளங்கி கொள்ள வேண்டும். பிள்ளையான் இன்று வரை திருந்தவில்லை. இதுதான் கடைசியும் முதலுமாக இருக்க வேண்டும்.

ஆட்டை கடித்து மாட்டை கடித்து இறுதியாக புனர்வாழ்வழிக்கப்பட்ட விடுதலை புலி கட்சி வேட்பாளரை கடிக்கின்ற அளவுக்கு இனி வரக்கூடாது. ஏனென்றால் நீர் வந்து என்னதான் இருந்தாலும் எங்களுடைய மக்களுக்கும், எமக்கும் துரோகம் செய்தனீர். ஆனால் நாங்கள் இறுதி யுத்தம் முடியும் வரைக்கும் எங்களுடைய தேசிய தலைவருக்கு துரோகம் செய்யாமல், முள்ளிவாய்க்காலில் வந்து தடுப்பில் இருந்து வந்த 12000 போராளிகள் நாங்கள்.

நாங்கள் சீறினால் மட்டக்களப்பை விட்டு ஓட வேண்டிய நிலைமை வரும். இனி மட்டக்களப்பு மாவட்டம் உன்னுடையது அல்ல. ஒன்றை மட்டும் விளங்கிக் கொள். மட்டக்களப்பு மாவட்டம் எங்களுடைய அம்மா பிறந்த மாவட்டம். அதேபோல கிழக்கும் , வடக்கும் இரண்டு கண்கள். சிவநேசதுறை சந்திரகாந்தன், ஜோசப் பராசிங்கத்தை சுட்டு விட்டு வெளியே வந்த மாதிரி. நொண்டி சாட்டை சொல்லிக்கொண்டு இனி புலி இடமிருந்து தப்பித்து வர முடியாது.

மனித உரிமைகளுக்கு மட்டுமல்லாமல் நாங்கள் தேர்தல் ஆணையாளருக்கும் கடிதம் எழுதி இருக்கின்றோம். அதே மாதிரி ஜனாதிபதி செயலகத்திற்கும் கடிதம் எழுதி இருக்கின்றோம். அதேபோல மட்டக்களப்பு தேர்தல் ஆணையாளர்களுக்கும் வேட்பாளர்கள் அனைவரும் நேரடியாக சென்று வாக்குமூலம் கொடுக்கப் போகின்றோம்.

இவர் ஏற்கனவே ஆயுத குழுவாய் இருந்தவர் இவரிடம் ஆயுதம் இருக்குதோ இல்லையோ அது தெரியாது. எங்களுடைய வேட்பாளர்கள் பயந்து கொண்டு இருக்கின்றனர். புலியான அவர்களிடம் ஆயுதம் களையப்பட்ட வரலாறு இல்லை. பிள்ளையானவர்கள் ஒன்றை விளங்கி கொள்ள வேண்டும். நாங்கள் முன்னால் போராளி. தாக்கப்பட்டவர்களுக்கு இந்த நிலைமை ஏற்பட்டுள்ளது என்றால் இவர்கள் ஒரு அச்சுறுத்தலை கொடுத்திருக்கின்றனர்.

காரணம் விளங்குகின்றது என்னவென்றால் புலி வருது என்ற உடன் இவர்களுக்கு பயம் வந்துவிட்டது என்ன காரணம் என்றால் இன்றைக்கும் ஏனைய அரசியல்வாதிகளுக்கு இவரை தண்டிக்க முடியாது. ஏனைய அரசியல்வாதி உடைய வாக்கும் இவருக்கு தான் விழும். ஆனால் விடுதலைப் புலிகள் என்ற ஒரு பெயருடன் இன்றைக்கு மட்டக்களப்பு மாவட்டத்தினுடைய புனர்வாழ்வழிக்கப்பட்ட விடுதலை புலிகள் வந்தால் மக்கள் அனைவரினதும் ஆதரவு விடுதலை புலிகளுக்கே கிடைத்துவிடும். பிறகு இந்த துரோக புலிக்கு இடம் இருக்காது. ஆனால் உண்மையான புலிக்கு இடம் இருக்கும். அந்த நோக்கத்தில் ஆட்களை தயார் செய்து தாக்குதல் நடத்தி இருக்கின்றனர்.

இவர் இது போல தொடர்ந்து செயற்பட்டால் அவருக்கு புலிகள் என்றால் யார் என்று காட்டவேண்டிய நிலையேற்படும் எனவும் அவர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

Tags: BattinaathamnewsSrilankasrilankanews

தொடர்புடையசெய்திகள்

கருவாடு கிலோ விலை 4,000 வரை அதிகரிப்பு
செய்திகள்

கருவாடு கிலோ விலை 4,000 வரை அதிகரிப்பு

August 2, 2026
சிறிதரனின் செயற்பாடுகள் கட்சிக்கு பாதிப்பை ஏற்படுத்தும்; சாணக்கியன் எச்சரிக்கை
அரசியல்

சிறிதரனின் செயற்பாடுகள் கட்சிக்கு பாதிப்பை ஏற்படுத்தும்; சாணக்கியன் எச்சரிக்கை

August 2, 2026
புலமைப்பரிசில் மாணவர்களுக்கான மேலதிக வகுப்புகளுக்கு 05ஆம் திகதி முதல் தடை
செய்திகள்

புலமைப்பரிசில் மாணவர்களுக்கான மேலதிக வகுப்புகளுக்கு 05ஆம் திகதி முதல் தடை

August 2, 2026
யாழில் பட்டாசு வெடித்த விபத்தில் இளைஞர் உயிரிழப்பு
செய்திகள்

யாழில் பட்டாசு வெடித்த விபத்தில் இளைஞர் உயிரிழப்பு

August 2, 2026
மஹர சிறைச்சாலை மோதலைத் தொடர்ந்து அமுல்படுத்தப்பட்ட பொலிஸ் ஊரடங்கு தொடர்கிறது
செய்திகள்

மஹர சிறைச்சாலை மோதலைத் தொடர்ந்து அமுல்படுத்தப்பட்ட பொலிஸ் ஊரடங்கு தொடர்கிறது

August 2, 2026
வடக்கில் 7,606 கட்டாக்காலி நாய்களுக்கு கருத்தடை செய்ய இலக்கு
செய்திகள்

வடக்கில் 7,606 கட்டாக்காலி நாய்களுக்கு கருத்தடை செய்ய இலக்கு

August 2, 2026
Next Post
5 மாகாண அதிகார சபைகளுக்கான புதிய தலைவர்களுக்கு கிழக்கு மாகாண ஆளுநரால் நியமனம் வழங்கி வைப்பு

5 மாகாண அதிகார சபைகளுக்கான புதிய தலைவர்களுக்கு கிழக்கு மாகாண ஆளுநரால் நியமனம் வழங்கி வைப்பு

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு
No Result
View All Result
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.