கம்பஹா காணிப்பதிவாளர் அலுவலகத்தில், கடந்த வாரம்காணி உரித்து பதிவு தொடர்பில் சிங்கள மொழி மட்டும் பயன்படுத்தப்படுவதாக தகவல் கிடைக்கப்பெற்றது.
இது தொடர்பில் ஊடக பணியாளர்கள் குழுவொன்று கம்பஹா காணிப்பதிவாளர் அலுவலகத்திற்குச் சென்று அவர்களிடம் இது குறித்து கேள்வி எழுப்பப்பட்டது
அதன் போது அவர்கள் காணி உரித்து பதிவு சிங்கள மற்றும் ஆங்கில மொழிகளில் மட்டும் மேற்கொள்ளப்படுவதாக தெரிவித்தனர்.
தமிழ் மக்கள் செறிந்து வாழும் வடக்கு கிழக்கு மாகாணங்களில் மட்டும் சிங்கள மொழிக்கு பதிலாக தமிழ் மொழி பயன்படுத்தப்படுவதாக தெரிவித்தனர்.
மேலும் அனைத்து விடயங்களும் டிஜிட்டல் மயப்படுத்தப்பட்டுள்ள காரணத்தினால் காணி உரித்து பதிவு மேற்கொள்வது சட்டத்திற்கு அமைவாக பதிவு செய்து கொள்ளும் மாதிரி விண்ணப்பத்தை இணையத்தில் தரவிறக்கம் செய்து சட்டத்தரணி ஊடாக உரித்து தொடர்பிலான பதிவு நடவடிக்கைகளை மேற்கொள்ள முடியும் என சுட்டிக்காட்டினர்.
பின்னர் காணிப் பதிவாளர் அலுவலகத்தின் ஊடாக இந்த விண்ணப்பங்களை சரியாக காணப்படுகின்றனவா என்பதை பரிசோதனை செய்து பதிவு செய்து கொள்ள முடியும் என விளக்கமளித்தனர்.
இணைய வழியில் இந்த ஆவணத்தை தரவிறக்கம் செய்து கொள்ள முடியாதவர்கள் மட்டும் காணி பதிவாளர் காரியாலயத்திற்கு சென்று விண்ணப்ப படிவத்தை பெற்றுக் கொள்ள முடியும் என தெரிவித்தனர்.
இதேவேளை மாதிரி விண்ணப்ப படிவத்தின் ஏதாவது ஓர் விடயம் மாற்றப்படக்கூடாது என 1998 ஆம் ஆண்டு 21 ஆம் இலக்க உரிமை பதிவு சட்டத்திற்கு பிரகாரம் 2022 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் முதலாம் திகதி அதி விசேட வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது.
அவ்வாறு சட்டத்தரணியினால் சமர்ப்பிக்கப்படும் விண்ணப்ப படிவத்தில் ஏதேனும் ஒரு மாற்றம் இருந்தால் அதனை திருத்தி காணிப்பதிவு காரியாலயத்தில் சமர்ப்பிப்பதன் மூலம் காணிப்பதிவினை மேற்கொள்ள முடியும் என கம்பஹா காணிப்பதிவு அலுவலக அதிகாரிகள் தெரிவித்தனர்.