அமெரிக்காவின் 47 ஆவது ஜனாதிபதியாக டொனால்ட் ட்ரம்ப் வெற்றி பெற்றுள்ளார்.
அமெரிக்காவின் ஜனாதிபதியை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் நேற்றைய தினம் (05) முடிவடைந்து இன்று டொனால்ட் ட்ரம்ப் அதிக வாக்குகளைப் பெற்று வெற்றிப் பெற்றுள்ளார்.
ஜனாதிபதித் தேர்தலில் வெற்றிப் பெற்றதையடுத்து தனது வெற்றியுரையையும் மக்களுக்கு வழங்கியுள்ளார்.
முன்னெப்போதும் இல்லாத வகையில் வெற்றி கிடைத்துள்ளது. குடியரசுக் கட்சி வெற்றிக்காக வாக்களித்த ஒவ்வொரு அமெரிக்கர்களுக்கும் எனது நன்றி என்று புதிதாக தேர்வு செய்யப்பட்டுள்ள அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் கூறியுள்ளார்.
அமெரிக்காவின் 47வது அதிபரை தேர்ந்தெடுக்க நடத்தப்பட்ட தேர்தலில், மகத்தான வெற்றி பெற்று அதிபராக மீண்டும் தேர்வு செய்யப்பட்டுள்ள டொனால்ட் டிரம்ப், நாட்டு மக்களுக்கு உரையாற்றி வருகிறார்.
அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்தில் உரையாற்றி வரும் டொனால்ட் டிரம்ப் தனது உரையின்போது, மக்கள் என்னை நம்பித்தான் வாக்களித்துள்ளனர். அவர்களின் நம்பிக்கை ஒருபோதும் வீண் போகாது என்று கூறியிருக்கிறார்.
வெற்றிக்கு உறுதுணையாக இருந்ததாக, தனது மனைவிக்கு உணர்ச்சிப்பொங்க நன்றி தெரிவித்துக்கொண்டார் டிரம்ப். மேலும், முன்னெப்போதும் இல்லாத வகையில் வெற்றி கிடைத்துள்ளது. என் மீது நம்பிக்கை வைத்து வாக்களித்த அமெரிக்க மக்களுக்கும் நன்றி என்று தெரிவித்துக் கொண்டார்.
இந்த முறை என்னுடைய ஆட்சி அமெரிக்காவின் பொற்காலமாக அமையப் போகிறது. இதுவரை யாரும் காணாத ஆட்சியை அளிக்கப்போகிறேன். அமெரிக்க மக்களுக்காக கடுமையாக உழைப்பேன்,
பிரச்னைகளைத் தீர்ப்பேன். எனது ஆட்சிக்காலம் அமெரிக்காவின் பொற்காலமாக அமையப் போகிறது. அமெரிக்க மக்கள் மகிழ்ச்சி மற்றும் பெருமைப்படும் வகையில் ஆட்சி நடத்துவேன் என்றும் டிரம்ப் உறுதி அளித்துள்ளார்.
அமெரிக்க அதிபர் தேர்தலில் மட்டுமல்ல, செனட் மற்றும் மக்கள் சபையிலும் நமக்கே முன்னிலை கிடைத்துள்ளது.
அமெரிக்க அதிபர் தேர்தலுக்கான வாக்குப்பதிவு இந்திய நேரப்படி நேற்று மாலை தொடங்கி நள்ளிரவு முதல் நடைபெற்று முடிந்த நிலையில், வாக்கு எண்ணிக்கைத் தொடங்கியது. தேர்தலில் வெற்றி பெற 270 இடங்களைப் பெற வேண்டும் என்ற நிலையில், அதை விட அதிக இடங்களில் வெற்றி பெற்று அமெரிக்காவின் 47வது அதிபராக டொனால்ட் டிரம்ப் தேர்வாகியிருக்கிறார்
அதேசமயம் டொனால்ட் ட்ரம்ப் இதுவரை 277 பேரின் ஆதரவை பெற்றும், கமலா ஹாரிஸ் 226 பேரின் ஆதவை பெற்றும் அதன் அடிப்படியில் டொனால்ட் ட்ரம்ப் மீண்டும் ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டுள்ளார்.