அமெரிக்காவின் ஓரிகான் பகுதியைச் சேர்ந்த பெண்ணொருவர் சுமார் ஆயிரத்து 600 லீற்றர் தாய்ப்பாலைத் தானமாகக் கொடுத்து கின்னஸ் சாதனை படைத்துள்ளார்.
எலிசபெத் சியாரா என்ற அந்தப் பெண், ஹைப் பர்லாக்டேஷன் என்ற நோயால் பாதிக்கப்பட்டுள்ளார்.
இதனால் அவருடைய உடல் நாளொன்றுக்கு 6.65 லீற்றர் தாய்ப்பாலை உற்பத்தி செய்கின்றது.
தனது தாய்ப்பால் வீணாகப் போவதை விரும்பாத சியாரா. தாயை இழந்த பச்சிளம் குழந்தைகளுக்கு உதவ முன்வந்து இதுவரை சுமார் ஆயிரத்து 600 லீற்றர் தாய்ப்பாலைத் தானமாகக் கொடுத்துள்ளார்.