Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
துயிலுமில்லங்களை ஜனாதிபதி சுடுகாடு என்றாவது நினைத்து விடுவிக்க வேண்டும்; சுதன் கோரிக்கை

துயிலுமில்லங்களை ஜனாதிபதி சுடுகாடு என்றாவது நினைத்து விடுவிக்க வேண்டும்; சுதன் கோரிக்கை

2 years ago
in செய்திகள்

ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க இதனை மாவீரர் துயிலுமில்லமாக நினைக்காவிடினும் ஒரு சுடுகாடாக நினைத்து விடுவிக்குமாறு கேட்டுக் கொள்கிறேன் என நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிடும் பொன். சுதன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

நேற்று முன்தினம் (9) மாலை கொடிகாமம் மாவீரர் துயிலுமில்லத்தில் அஞ்சலி செலுத்திய பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே இவ்வாறு குறிப்பிட்டார்.

இங்கு தொடர்ந்தும் கருத்து தெரிவித்த அவர், “இங்குதான் ஆயிரக்கணக்கான மாவீரர்களுடைய வித்துடல் விதைக்கப்பட்டுள்ளது. அதில் எனது சகோதரரும் ஒருவர். எம்மை பொறுத்தவரை இது துயிலுமில்லம் ஒரு சிலரை பொறுத்தவரை இது சுடுகாடு.

பிணங்கள் குவிக்கப்பட்ட இடத்தில் குடியிருப்பதை நான் இதை விட வேறு எங்கும் கண்டதில்லை. எங்களுடைய உறவுகள் புதைக்கப்பட்ட இடங்களில் இலங்கை இராணுவம் குடியிருக்கின்றது.

அவர்களைப் பொறுத்தவரை இவர்கள் பயங்கரவாதிகளாக இருக்கலாம். ஆனால் எம்மை பொறுத்தவரை இவர்கள் எமது உறவுகள், அண்ணன் தங்கைகள்.

இவர்களை அஞ்சலிக்க கூட முடியாத நிலையில் இலங்கை அரசாங்கம் எம்மை வைத்துள்ளது

இந்த இடத்தில் நின்று கொண்டு இலங்கை ஜனாதிபதி, பெளத்த குருமார்கள், சிங்கள மக்களுக்கு இருகரம் கூப்பி ஒரு வேண்டுகோள் விடுக்கின்றேன்.

ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க இதை துயிலும் இல்லமாக நினைக்காவிடினும் ஒரு சுடுகாடாக நினைத்து இதை விடுவிக்குமாறு கேட்டுக் கொள்கிறேன்.

இதை விடுவிக்கும் பட்சத்தில் அமைதி, சமாதானம் இதில் இருந்தே ஆரம்பிக்கப்படும். இறந்தவர்களை அஞ்சலி செலுத்தும் உரிமை தமிழ் மக்களுக்கு கிடைக்கும் போது ஒரளவேனும் மனநிறைவாக இந்த நாட்டில் அவர்கள் வாழ முடியும்” என தெரிவித்தார்.

Tags: BattinaathamnewsSrilankasrilankanews

தொடர்புடையசெய்திகள்

நாமல் ராஜபக்ஷவுக்கு ஆசீர்வாதம் வேண்டி மாவட்ட அமைப்பாளர் சுரேஸ்குமார் விசேட பூஜை வழிபாடு!
செய்திகள்

நாமல் ராஜபக்ஷவுக்கு ஆசீர்வாதம் வேண்டி மாவட்ட அமைப்பாளர் சுரேஸ்குமார் விசேட பூஜை வழிபாடு!

September 8, 2026
பெண்கள் மற்றும் பிள்ளைகளை தொழிலுக்கமர்த்துதல் திருத்தச் சட்டம் அமுலுக்கு வந்தது!
செய்திகள்

பெண்கள் மற்றும் பிள்ளைகளை தொழிலுக்கமர்த்துதல் திருத்தச் சட்டம் அமுலுக்கு வந்தது!

September 8, 2026
கொழும்புத் துறைமுகத்தின் டிஜிட்டல் வளர்ச்சிக்கு அமெரிக்காவிடமிருந்து 15 மில்லியன் டொலர்!
செய்திகள்

கொழும்புத் துறைமுகத்தின் டிஜிட்டல் வளர்ச்சிக்கு அமெரிக்காவிடமிருந்து 15 மில்லியன் டொலர்!

September 8, 2026
இந்த ஆண்டிற்குள் பல புதிய அதிவேக நெடுஞ்சாலைகள் பணி ஆரம்பம்!
செய்திகள்

இந்த ஆண்டிற்குள் பல புதிய அதிவேக நெடுஞ்சாலைகள் பணி ஆரம்பம்!

September 8, 2026
தனியார் துறை ஊழியர்களுக்கு இணையவழி ரயில் பருவகாலச் சீட்டு வசதி!
செய்திகள்

தனியார் துறை ஊழியர்களுக்கு இணையவழி ரயில் பருவகாலச் சீட்டு வசதி!

September 8, 2026
சபாநாயகர் இன்று வெளியிட்ட முக்கிய சட்ட அறிவிப்புகள்!
செய்திகள்

சபாநாயகர் இன்று வெளியிட்ட முக்கிய சட்ட அறிவிப்புகள்!

September 8, 2026
Next Post
அனுராவின் சித்தாந்தமே பாராளுமன்றத்தில் எதிரொலிக்க வேண்டும்

அனுராவின் சித்தாந்தமே பாராளுமன்றத்தில் எதிரொலிக்க வேண்டும்

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு