தமிழ் அரசியலில் ஆதிக்கம் செலுத்தும் நோக்கில் எதிர்வரும் பாராளமன்ற தேர்தலை பயன்படுத்த சில புலம்பெயர் வர்த்தகர்கள் முயற்சிக்கின்றார்கள்.
குறிப்பாக லைக்கா உரிமையாளர் திரு சுபாஷ்கரன் திரைமறைவில் பல கோடி ரூபா செலவழித்து வேட்பாளர்களை பல்வேறு சின்னங்களில் களமிறக்கியிருக்கின்றார்.
வன்னியில் கங்காரு சின்னத்தில் போட்டியிடும் திரு மஸ்தான் அவர்களுக்கு லைக்கா கோடிக்கணக்காணக்கான பணத்தை செலவழித்து வருகின்றது.
திரு பிரபா கணேசனின் தபால் பெட்டி சின்னத்தில் போட்டியிடும் வேட்பாளர்களுக்கும் லைக்கா பணம் கைமாற்றப்பட்டுள்ளது.
குறிப்பாக யாழ்ப்பாணத்தில் தபால் பெட்டியில் களமிறக்கப்பட்டுள்ள அங்கஜன் இராமநாதனுக்கும் லைக்கா பணம் செலவழித்து வருகின்றது.
வன்னியில் தபால் பெட்டியின் ஊடக களமிறக்கப்பட்டுள்ள ரெலோ அமைப்பை சேர்ந்த உதயராசா அவர்களுக்கும் லைக்கா பணம் வழங்கியிருக்கின்றது. லைக்கா நிதி அனுசரணையுடன் மட்டக்களப்பில் களமிறக்கபட்டதிரு வியாழேந்திரன் வேட்புமனு நிராகரிக்கப்பட்டுள்ளது.
அதே போல சங்கு கூட்டணியில் போட்டியிடும் ரெலோ அமைப்புக்கும் லைக்கா பணம் செலவழித்து வருகின்றது.
குறிப்பாக யாழ்ப்பாணத்தில் போட்டியிடும் திரு குருசுவாமி சுரேந்திரன், வன்னியில் போட்டியிடும் திரு செல்வம் அடைக்கலநாதன் (மன்னார்), திரு விஜிந்தன் (முல்லைத்தீவு), திரு மயூரன் (வவுனியா) போன்றவர்களுக்கும் லைக்கா பணம் செலவழித்து வருகின்றது.
யாழ்ப்பாணத்தில் வீட்டு சின்னத்தில் போட்டியிடும் திரு சிறிதரன், மான் சின்னத்தில் போட்டியிடும் திரு மணிவண்ணன், மற்றும் சங்கு சின்னத்தில் போட்டியிடும் சுரேஷ் பிரேமச்சந்திரன் ஆகியோரும் திரு சுபாஷ்கரனுடன் தொடர்பில் இருக்கின்றார்கள்.
ஆனால் இவர்களுக்கு லைக்கா நிதி உதவி அளிக்கும் தகவல்களை உறுதிப்படுத்த முடியவில்லை.
ஜனாதிபதி தேர்தலில் முன்னிறுத்தப்பட்ட பொதுவேட்பாளருக்கு மட்டும் குறைந்தது 3 கோடி ரூபா லைக்கா செலவழித்திருந்தது.
இது தவிர தெற்கில் திரு ரஞ்சன் ராமநாயக்க தலைமையில் பல்வேறு பகுதிகளில் லைக்கா வேட்பாளர்களை நிறுத்தி பணம் செலவழித்து வருகின்றது.
பொது தேர்தலுக்கு பின்னர் சகல தரப்புகளையும் ஒன்றிணைத்து வெல்லப்படும் என எதிர்பார்க்கும் தேசியப்பட்டியல் பாராளமன்ற உறுப்பினராக திரு சுபாஷ்கரன் பாராளமன்றம் செல்ல முயற்சிப்பதாகவும் சொல்லப்படுகின்றது.
மறுபுறம் ஐ.பி.சி நிறுவுனர் திரு கந்தையா பாஸ்கரன் யாழ்ப்பாணத்தில் வீட்டு சின்னத்தில் போட்டியிடும் திரு சுமந்திரன் அவர்களுக்கு எதிராக பிரச்சாரம் செய்து வருகின்றார்.
ஆனால் அதே கட்சி சின்னத்தில் போட்டியிடும் திரு ஆர்னோல்ட் அவர்களுக்கும் மான் சின்னத்தில் போட்டியிடும் முதன்மை வேட்பாளருக்கும் பணம் செலவழிப்பதாக சொல்லப்படுகின்றது.
இது போதாதென்று யாழ்ப்பாணத்தில் தொழிலதிபர் திரு விண்ணன் பல்வேறு அதிர்ச்சியூட்டும் தரவுகளை வெளியிட்டு இருக்கின்றார்.
டக்ளஸ் தேவானந்தா மற்றும் திரு அங்கஜன் இராமநாதன் ஆகியோருக்கு வெவ்வேறு காலங்களில் தேர்தலுக்கு நிதி அளித்திருப்பதையும் எற்று கொண்டிருக்கின்றார்.