ஹமாஸ் அமைப்பினர் ஆயுதங்களை போட்டுவிட்டு பணயக்கைதிகளை விடுவிக்காவிட்டால் காஸாநகரையே அழித்துவிடுவோம் என இஸ்ரேல் பாதுகாப்பு அமைச்சர் தெரிவித்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
ஹமாஸ் தனது ஆயுதங்களை கைவிடவும், எஞ்சியுள்ள பணயக்கைதிகளை விடுவிக்கவும் ஒப்புக்கொள்ளவில்லை என்றால், இந்த நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்துள்ளார்.
இஸ்ரேலின் நிபந்தனைகள்படி மட்டுமே போர் முடிவுக்கு கொண்டு வரப்படும் என அவர் வலியுறுத்தியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு, காஸாவில் எஞ்சியுள்ள அனைத்து பணயக்கைதிகளையும் விடுவிக்க உடனடி பேச்சுவார்த்தைக்காக உத்தரவு பிறப்பித்ததைத் தொடர்ந்து, இந்த பேச்சு வெளியாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
காஸாவைக் கைப்பற்றும் திட்டத்தின் ஒரு பகுதியாக, சுமார் 60,000 இஸ்ரேலியப் படைவீரர்கள் இந்த வாரம் இராணுவ சேவைக்கு அழைக்கப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.








