Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
யாழ் போதனா வைத்தியசாலை தொடர்பில் முன்வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டு!

யாழ் போதனா வைத்தியசாலை தொடர்பில் முன்வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டு!

2 years ago
in செய்திகள், முக்கிய செய்திகள்

யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் உயிரிழந்த ஒருவரின் சடலம் அவரது உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டு வீட்டுக்கு கொண்டு செல்லப்பட்ட பின்னர் மீண்டும் வைத்தியசாலைக்கு எடுத்து வரப்பட்டுள்ளது.

இச்சம்பவமானது நேற்று முன்தினம் (22) இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

கருங்காலி, காரைநகர் பகுதியில் வசித்து வந்த சின்னையா (வயது 71) என்பவரது சடலமே இவ்வாறு மீண்டும் வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டது.

இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில், குறித்த நபர் கடந்த 26.03.2024 அன்று சங்கானைப் பகுதியில் வீதியை கடக்க முற்பட்டவேளை மோட்டார் சைக்கிள் மோதி விபத்துக்குள்ளானார்.

இந்நிலையில் சங்கானை வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டு, பின்னர் அங்கிருந்து யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்துள்ளார்.

இதனையடுத்து சிகிச்சை பலனின்றி நேற்று(22) அதிகாலை 2.00 மணியளவில் உயிரிழந்துள்ளார்.

உயிரிழந்தவரின் சடலம் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்ட நிலையில், வீட்டுக்கு எடுத்துச் செல்லப்பட்டு இறுதிச்சடங்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டன.

விபத்தில் ஏற்பட்ட மரணம் என்ற காரணத்தினால் விசாரணைகளை மேற்கொள்வதற்கு மானிப்பாய் காவல்துறையினர் வைத்தியசாலைக்கு சென்றவேளை அங்கு சடலம் இல்லை.

இந்நிலையில் மீண்டும் சடலத்தை வைத்தியசாலைக்கு எடுத்து வந்து உடற்கூற்று பரிசோதனைகளின் பின்னரே உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. சடலம் மீதான மரண விசாரணைகளை திடீர் மரண விசாரணை அதிகாரி ஆ.ஜெயபாலசிங்கம் மேற்கொண்டார்.

வைத்தியசாலை தரப்பின் அசமந்தமான இச்சம்பவத்தினால் இறுதிச் சடங்குகளில் தடை ஏற்பட்டதுடன் வீண் அலைச்சலும் செலவுகளும் ஏற்பட்டுள்ளது.

யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் தினமும் இவ்வாறான முறைகேடுகள் இடம்பெற்று வரும் நிலையில் வைத்தியசாலை நிர்வாகம் தூக்கத்தில் இருக்கின்றதா என மக்கள் கேள்வி எழுப்புகின்றனர்.

தொடர்புடையசெய்திகள்

ராவண எல்ல நீர்வீழ்ச்சியில் திடீர் நீர்ப்பெருக்கு
செய்திகள்

ராவண எல்ல நீர்வீழ்ச்சியில் திடீர் நீர்ப்பெருக்கு

June 25, 2026
நிதி தட்டுப்பாடு; யாழ் சர்வதேச கிரிக்கெட் மைதானத் திட்டம் சுருக்கப்படுகிறது
செய்திகள்

நிதி தட்டுப்பாடு; யாழ் சர்வதேச கிரிக்கெட் மைதானத் திட்டம் சுருக்கப்படுகிறது

June 25, 2026
சாதாரணதர பரீட்சை பெறு​பேறுகளை மீளாய்வுசெய்வதற்கான அறிவிப்பு
செய்திகள்

சாதாரணதர பரீட்சை பெறு​பேறுகளை மீளாய்வுசெய்வதற்கான அறிவிப்பு

June 25, 2026
வாகாரையில் விழிப்புணர்வு நடைபவனியும் போசாக்கு உணவு கண்காட்சியும்
செய்திகள்

வாகாரையில் விழிப்புணர்வு நடைபவனியும் போசாக்கு உணவு கண்காட்சியும்

June 25, 2026
வீதியில் குப்பை வீசிய இருவருக்கு தண்டம்; தமிழர் பகுதியில் சம்பவம்
செய்திகள்

வீதியில் குப்பை வீசிய இருவருக்கு தண்டம்; தமிழர் பகுதியில் சம்பவம்

June 25, 2026
நாமல் ராஜபக்ஷ வழக்கில் இந்திய சாட்சிகளுக்கு அழைப்பாணை விடுக்க நீதிமன்றம் உத்தரவு!
செய்திகள்

நாமல் ராஜபக்ஷ வழக்கில் இந்திய சாட்சிகளுக்கு அழைப்பாணை விடுக்க நீதிமன்றம் உத்தரவு!

June 25, 2026
Next Post
கட்சியை ஏலம் விடும் மைத்திரி; மஹிந்த அமரவீர குற்றச்சாட்டு!

கட்சியை ஏலம் விடும் மைத்திரி; மஹிந்த அமரவீர குற்றச்சாட்டு!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு