மட்டக்களப்பு மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் ஜி.சுகுணன் வழிகாட்டலில் உணவகங்கள் பரிசோதனை செய்யும் நிகழ்வுகள் இடம்பெற்று வருகின்றது.
அந்த வகையில் வாழைச்சேனை பொதுச் சுகாதார வைத்திய அதிகாரி பிரிவு ஓட்டமாவடி பொதுச் சுகாதார வைத்திய அதிகாரி கோறளைப்பற்று மத்தி பொதுச் சுகாதார வைத்திய அதிகாரி பிரிவு ஆகியவற்றில் காணப்படும் உணவகங்களில் உணவு கையாளும் முறைகள் தொடர்பில் பரிசோதனை இடம்பெற்றது.
குறித்த பரிசோதனையில் மட்டக்களப்பு மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனையின் உணவு ஔடத பரிசோதர்கள் மற்றும் பொதுச் சுகாதார வைத்திய அதிகாரிகள், மேற்பார்வை பொதுச் சுகாதார பரிசோதகர்கள், பொதுச் சுகாதார பரிசோதகர்கள், உட்பட்டோர் கலந்து கொண்டனர்.
இதன்போது வாழைச்சேனை பொதுச் சுகாதார வைத்திய அதிகாரி பிரிவு ஓட்டமாவடி பொதுச் சுகாதார வைத்திய அதிகாரி கோறளைப்பற்று மத்தி பொதுச் சுகாதார வைத்திய அதிகாரி பிரிவு ஆகியவற்றில் இடம்பெற்ற பரிசோதனையில் ஐந்து வியாபார நிலையங்களுக்கு வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளதுடன் பதின்மூன்று வியாபார நிலையங்கள் மூடுமாறு அறிவுறுத்தப்பட்டதுடன் கடைகளை திருத்தம் செய்யுமாறு பணிப்புரை வழங்கப்பட்டுள்ளதுடன், புனரமைக்கப்பட்டதன் பிற்பாடு சுகாதார வைத்திய அதிகாரிகளின் மேற்பார்வையின் பின்னர் திறக்க அனுமதி வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்தோடு ஏனைய கடைகளில் காணப்பட்ட குறைபாடுகள் துப்புரவு இன்மை தொடர்பில் தெளிவுபடுத்தப்பட்டு கால அவகாசம் வழங்கப்பட்டு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதுடன், பாவனைக்குதவாத உணவுகன் அப்புறப்படுத்தப்பட்டு அழிக்கப்பட்டது.