கிழக்கு மாகாணத்தில் முதன்முறையாக நவீன செயற்கை கருத்தரிப்பு மையம் மட்டக்களப்பில் மாவட்ட அரசாங்க அதிபரினால் திறந்துவைக்கப்பட்டது.
இதுவரை காலம் கொழும்பு மற்றும் இந்தியாவினை நோக்கிசென்றுகொண்டிருந்த கிழக்கு மாகாண மக்களின் நன்மை கருதி இந்த மையம் இன்று மட்டக்களப்பு ஈ.எம்.எஸ்.வைத்தியசாலையில் திறந்துவைக்கப்பட்டது.
ஈ.எம்.எஸ்.வைத்தியசாலையின் தலைவர் மகிந்தன் இராஜேந்திரன் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி கலாமதி பத்மராஜாத பிரதம அதிதியாக கலந்துகொண்டு திறந்துவைத்தார்.
இந்த நிகழ்வில் மண்முனை வடக்கு உதவி பிரதேச செயலாளர் ஷியாஹுல் ஹாக், நோர்வேயின் பிரபல வைத்தியரும் ஈ.எம்.எஸ்.வைத்தியசாலையின் பணிப்பாளர் சபை உறுப்பினர் டாக்டர் ஜோன்பிள்ளை உட்பட பலர் கலந்துகொண்டனர்.
கிழக்கு மாகாணத்து மக்களின் நன்மை கருதி நவீன வசதிகளுடன் பிரபல வைத்திய நிபுணர் டாக்டர் ரத்நாயக்கவின் வழிகாட்டலின் கீழ் இந்த கருத்தரிப்பு மையம் உருவாக்கப்பட்டு அதன் சேவைகள் வழங்கப்படுகின்றது.
பொதுமக்கள் வெளிநாடுகளுக்கு சென்று அதிகளவான பணத்தினை செலவிடுவதை தவிர்த்து குறுகிய காலத்திற்குள் சிறந்த சேவையினை இங்கு பெற்றுக்கொள்ளமுடியும் என இங்கு தெரிவிக்கப்பட்டது.