Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
பாராளுமன்ற உறுப்பினர்களுக்கான கொடுப்பனவு விபரம்; குஷானி ரோஹணதீர தகவல்

பாராளுமன்ற உறுப்பினர்களுக்கான கொடுப்பனவு விபரம்; குஷானி ரோஹணதீர தகவல்

2 years ago
in செய்திகள், முக்கிய செய்திகள்

பாராளுமன்ற உறுப்பினர் ஒருவருக்கு சம்பளம் அல்லது கொடுப்பனவே வழங்கப்படுவதாக இலங்கை பாராளுமன்றத்தின் செயலாளர் நாயகம் திருமதி குஷானி ரோஹணதீர தெரிவித்துள்ளார்.

இலங்கையின் ஊடக நிகழ்ச்சி ஒன்றில் இணைந்துகொண்ட அவர் மேலும் குறிப்பிடுகையில், தற்போது ஒரு நாடாளுமன்ற உறுப்பினருக்கு கிட்டத்தட்ட ரூ.54,000 கொடுப்பனவுகள் வழங்கப்படுகின்றன.

இது தவிர, நாடாளுமன்றக் கூட்டங்கள் நடைபெறும் நாட்களில் வருகைப் படியாக ரூ.2,500 மற்றும் கூட்டத்தொடர் இல்லாத நாட்களில் செயற்குழு விவகாரங்களில் கலந்து கொள்வதற்கு ரூ.2,500 உதவித்தொகையாக வழங்கப்படும்.

எரிபொருள் கொடுப்பனவு தூரத்தை அடிப்படையாகக் கொண்டது என்று அவர் குறிப்பிட்டார், இது ஒரு சூத்திரத்தின்படி கணக்கிடப்படுகிறது.

அதுமட்டுமல்லாமல், நாடாளுமன்றத்தில் இருந்து 40 கிலோ மீட்டருக்குள் வீடு இல்லாதவர்கள் விண்ணப்பித்து மாதிவெல குடியிருப்பில் வீடு ஒன்றினை பெற்றுக் கொள்ளலாம் என்றும் அவர் கூறினார்.

மாதிவெலவில் இவ்வாறான 108 வீடுகள் இருப்பதாகவும், ஆளும் கட்சி மற்றும் எதிர்க்கட்சியினரின் வேண்டுகோளுக்கு இணங்க முதலில் கோரிக்கைகள் முன்வைக்கப்படும் வரிசையில் வீடுகள் வழங்கப்படும் என்றும் திருமதி குஷானி ரோஹணதீர தெரிவித்தார்.

மேலும், வீட்டு வாடகையாக 2,000 ரூபாய் செலுத்தப்படும் என்றும், மின்சாரம் மற்றும் தண்ணீர் கட்டணத்தை சம்பந்தப்பட்ட உறுப்பினர் செலுத்த வேண்டும் என்றும் நாடாளுமன்ற பொதுச் செயலாளர் மேலும் தெரிவித்தார்.

மேலும், ஸ்ரீ ஜயவர்தனபுர வைத்தியசாலையில் மருத்துவ வசதிகளை பெற்று கொடுப்பதன் மூலம் கொடுப்பனவுகளில் இருந்து தொகையை குறைக்க பாராளுமன்றமும் பாராளுமன்ற அலுவல்கள் அமைச்சும் வசதியளித்துள்ளதாக தெரிவித்த செயலாளர் நாயகம், தனிப்பட்ட ஊழியர்களுக்கு தேவையான கொடுப்பனவுகளையும் உரிய அமைச்சு ஏற்கும் எனவும் குறிப்பிட்டார்.

Tags: BattinaathamnewsSrilankasrilankanews

தொடர்புடையசெய்திகள்

புலிகளின் ஆயுதங்கள் பாதாள உலகக் குழுக்களிடம் உள்ளதா? பொலிஸார் விசாரணை
செய்திகள்

புலிகளின் ஆயுதங்கள் பாதாள உலகக் குழுக்களிடம் உள்ளதா? பொலிஸார் விசாரணை

September 13, 2026
ஹம்பாந்தோட்டை துறைமுகத்திற்கு இறக்குமதியாகும் கார்களின் ஸ்மார்ட் சாவிகளை திருடிவந்தவர்கள் கைது
செய்திகள்

ஹம்பாந்தோட்டை துறைமுகத்திற்கு இறக்குமதியாகும் கார்களின் ஸ்மார்ட் சாவிகளை திருடிவந்தவர்கள் கைது

September 13, 2026
எரிபொருள் விலைகளை அதிகரிக்க விநியோகஸ்தர்கள் சங்கம் கோரிக்கை
செய்திகள்

எரிபொருள் விலைகளை அதிகரிக்க விநியோகஸ்தர்கள் சங்கம் கோரிக்கை

September 13, 2026
தெஹிவளை கைக்குண்டுத் தாக்குதல்; இரு குழந்தைகள் உயிரிழந்த சம்பவம் குறித்து ஐ.நா கவலை!
செய்திகள்

தெஹிவளை கைக்குண்டுத் தாக்குதல்; இரு குழந்தைகள் உயிரிழந்த சம்பவம் குறித்து ஐ.நா கவலை!

September 12, 2026
ரோஹிங்கியா முஸ்லிம்கள் அகதிகள் அல்ல அவர்கள் தீவிரவாதிகள் !
செய்திகள்

ரோஹிங்கியா முஸ்லிம்கள் அகதிகள் அல்ல அவர்கள் தீவிரவாதிகள் !

September 12, 2026
கைது செய்யப்பட்ட ஷிரான் பாஸிக்கின் தந்தை விளக்கமறியலில்
செய்திகள்

கைது செய்யப்பட்ட ஷிரான் பாஸிக்கின் தந்தை விளக்கமறியலில்

September 12, 2026
Next Post
காத்தான்குடி பொலிஸ் பிரிவில் விசேட சுற்றிவளைப்பு; 30 பேர் கைது

காத்தான்குடி பொலிஸ் பிரிவில் விசேட சுற்றிவளைப்பு; 30 பேர் கைது

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு