சவுதி அரேபியாவில் கைது செய்யப்பட்டுள்ள இலங்கையை சேர்ந்த அனோஜன் சிவராஜா என்பவரை விடுதலை செய்யுமாறு கோரி, சவுதியில் பணிபுரியும் இலங்கை முஸ்லிம்கள் ஒன்றிணைந்து சவுதி அரேபிய நீதியமைச்சிடம் கருணை மனுக்கள் சமர்பித்துள்ளனர்.
அனோஜன் சிவராஜா பகிரங்க மன்னிப்பு கேட்டுள்ளதால், அவரை விடுதலை செய்யுமாறு கோரும் மகஜர்களை இலங்கை முஸ்லிம் தொழிலாளர்கள் நேரடியாக சவுதி அரேபிய நீதி அமைச்சிடம் கையளித்துள்ளனர்.
சவுதியில் தொழில் புரியும் இலங்கையை சேர்ந்த முஸ்லிம் சமூகம் ஒன்றிணைந்து இந்த முயற்சியை மேற்கொண்டுள்ளது.
இந்த கருணை மனுக்களின் அடிப்படையில் அனோஜன் சிவராஜா மிக விரைவில் தண்டனையிலிருந்து விடுதலையாகி வெளியே வருவார் என இலங்கை முஸ்லிம் சமூகம் நம்பிக்கை தெரிவித்துள்ளது.








