Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
பொறுப்பினை தந்தால் வடக்கிலும் தமிழரசு கட்சியை கட்டியெழுப்புவேன்; சாணக்கியன்

பொறுப்பினை தந்தால் வடக்கிலும் தமிழரசு கட்சியை கட்டியெழுப்புவேன்; சாணக்கியன்

2 years ago
in அரசியல், செய்திகள், மட்டு செய்திகள்

தமிழரசுக்கட்சியினை வடக்கிலும் நாங்கள் கட்டியெழுப்ப தயாராகயிருக்கின்றோம் எனவும், பொறுப்பினை தந்தால் தமிழரசுக்கட்சியை மட்டக்களப்பு மாவட்டத்தில் கட்டியெழுப்பியதுபோன்று ஏனைய மாவட்டங்களிலும் கட்டியெழுப்ப தயாராகயிருக்கின்றேன் எனவும் இலங்கை தமிழரசுக்கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் தெரிவித்தார்.

கடந்த பாராளுமன்ற தேர்தலில் வடகிழக்கில் அதிகூடிய விருப்பு வாக்கினைப்பெற்று வெற்றிபெற்ற பாராளுமன்ற உறுப்பினராக கருதப்படும் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் அவர்களுக்கு வரவேற்பளித்து கௌரவிக்கும் நிகழ்வு நேற்று (24) மட்டக்களப்பில் நடைபெற்றது.

இந்த வரவேற்பானது பட்டிப்பளை பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட முதலைக்குடா ஆலயங்கள்,கிராம அமைப்புகள், விளையாட்டுக்கழகங்கள், முனைக்காடு ஆலயங்கள்,கிராம அமைப்புகள், விளையாட்டுக்கழகங்கள் இணைந்து இந்த வரவேற்பினை வழங்கியிருந்தன.

இதேபோன்று முனைக்காடு பகுதியிலும் ஆலயங்கள்,கிராம அமைப்புகள், விளையாட்டுக்கழகங்கள் இணைந்து வரவேற்பினை பாராளுமன்ற உறுப்பினருக்கு வழங்கியது.இதன்போது உரையாற்றிய பாராளுமன்ற உறுப்பினர் சாணக்கியன்,

2024 ஆம் ஆண்டு பாராளுமன்ற தேர்தலானது ஒரு சவால் மிக்க தேர்தலாக அமையும் என பலராலும் எதிர்பார்க்கப்பட்டது அதிலும் குறிப்பாக வடக்கு கிழக்கில் மட்டக்களப்பில் பெரும் சவாலாக வரும் என எதிர்பார்க்கப்பட்டிருந்தது மட்டக்களப்பு மாவட்டத்தில் இம்முறை தேர்தலில் இலங்கை தமிழரசு கட்சிக்கு வீட்டு சின்னத்திற்கு ஒரே ஒரு ஆசனம் தான் கிடைக்கும் என பலராலும் பேசப்பட்டது.

பலர் பல அச்சுறுத்தல்களை கொடுத்திருந்தார்கள். மட்டக்களப்பில் நீங்கள் ஒரு சில கொலைகார கட்சிகளை சேர்த்து எடுக்காவிட்டால் நீங்கள் இம்முறை ஒரு ஆசனத்தை பெறுவதும் கஷ்டமாக இருக்கும் இஸ்லாமிய சகோதரர்கள் மூன்று ஆசனங்களை தட்டி விட்டு செல்வார்கள். தமிழ் பாராளுமன்ற பிரதிநிதித்துவம் இல்லாமல் போக போகின்றது என்று எல்லாம் கூறினார்கள் ஆனால் கடந்த நான்கு வருடங்களாக மட்டக்களப்பு மாவட்டத்தில் அனைத்து மூளை முடுக்குகளுக்கும் சென்று மக்களோடு மக்களாக நின்றதன் காரணமாக என்னுடைய மனதில் தெரிந்திருந்தது. நாங்கள் மட்டக்களப்பில் நிச்சயமாக நான்கு ஆசனங்கள் எடுக்கக்கூடிய அளவில் எமது ஆதரவு இருக்கின்றது என்பது எனக்கு தெரிந்த விடயம்.

இந்த நான்காவது ஆசனத்தை இழந்தது வெறும் 8000 வாக்குகளினால். நான்காவது ஆசனம் பெறுவதற்கும் சில வழிகள் காணப்பட்டது. அந்த நான்காவது ஆசானம் பெற முடியாமல் போனது சில கட்சிக்குள்ளே இருக்கின்ற சிலர், அதாவது கட்சிக்குள் இருப்பவர்கள் என்பதை விட கட்சிக்கு எதிராக செயல்பட்டு என்னுடைய விருப்பு வாக்குகளை குறைக்க வேண்டும் என எடுத்த சில முன்னெடுப்புகளின் காரணமாகத்தான் அந்த 8000 வாக்குகள் இல்லாமல் சென்றது அவர்கள் மௌனமாக இருந்திருந்தாலே 8000 வாக்குகளுக்கு மேலதிகமாக கிடைக்கப்பெற்றிருக்கும். என்றார்.

Tags: BattinaathamnewsSrilankasrilankanews

தொடர்புடையசெய்திகள்

90 நாடுகளின் ஊடகவியலாளர்கள் பங்கேற்புடன் ‘CIPCC’ பீஜிங்கில் ஆரம்பம்!
உலக செய்திகள்

90 நாடுகளின் ஊடகவியலாளர்கள் பங்கேற்புடன் ‘CIPCC’ பீஜிங்கில் ஆரம்பம்!

September 5, 2026
மட்டு ஆயித்தியமலை தூய சதா சகாய அன்னை திருத்தலம் நோக்கி பல்லாயிரக்கணக்கானோர் பாதயாத்திரை!
காணொளிகள்

மட்டு ஆயித்தியமலை தூய சதா சகாய அன்னை திருத்தலம் நோக்கி பல்லாயிரக்கணக்கானோர் பாதயாத்திரை!

September 5, 2026
ஈரானுடனான மோதல் எங்களுக்கு சிறிய விடயம்; ட்ரம்ப்!
உலக செய்திகள்

ஈரானுடனான மோதல் எங்களுக்கு சிறிய விடயம்; ட்ரம்ப்!

September 5, 2026
கொழும்பில் இளம் தமிழ் யுவதி கழுத்து அறுக்கப்பட்டு கொடூரமாக கொலை; சந்தேகநபரின் சடலமும் மீட்பு!
செய்திகள்

கொழும்பில் இளம் தமிழ் யுவதி கழுத்து அறுக்கப்பட்டு கொடூரமாக கொலை; சந்தேகநபரின் சடலமும் மீட்பு!

September 5, 2026
மாட்டைக் காப்பாற்ற முயன்றபோது விபத்து; உழவு இயந்திரம் குளத்தில் கவிழ்ந்து 17 வயது இளைஞர் பலி
செய்திகள்

மாட்டைக் காப்பாற்ற முயன்றபோது விபத்து; உழவு இயந்திரம் குளத்தில் கவிழ்ந்து 17 வயது இளைஞர் பலி

September 5, 2026
மின்வெட்டு குறித்து அச்சம் வேண்டாம்; மின்சார விநியோகத்தில் தடையில்லை என அமைச்சர் அறிவிப்பு!
செய்திகள்

மின்வெட்டு குறித்து அச்சம் வேண்டாம்; மின்சார விநியோகத்தில் தடையில்லை என அமைச்சர் அறிவிப்பு!

September 5, 2026
Next Post
ஜே.வி.பியின் பதவிகளிலிருந்து விலகும் ரில்வின் சில்வா?

ஜே.வி.பியின் பதவிகளிலிருந்து விலகும் ரில்வின் சில்வா?

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு
No Result
View All Result
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.