கனடாவிலிருந்து அமெரிக்காவுக்கு இறக்குமதி செய்யப்படும் பல்வேறு பொருட்களுக்கு 50 சதவீத சுங்க வரி விதிக்க அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் தீர்மானித்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
இந்த புதிய வரி அடுத்த 30 நாட்களுக்குள் அமுலுக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. அமெரிக்க உற்பத்திப் பொருட்களான வாகனங்கள், பால் பொருட்கள் மற்றும் மதுபானங்களுக்கு கனடா விதித்த வரிகளுக்கு பதிலடியாக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
நுகர்வோர் பொருட்கள் உள்ளிட்ட கனடாவின் பல்வேறு ஏற்றுமதி பொருட்கள் இந்த வரி விதிப்பால் பாதிக்கப்படலாம் என தெரிவிக்கப்படுகிறது. இந்த நடவடிக்கை அமெரிக்கா–கனடா வர்த்தக உறவில் மேலும் பதற்றத்தை ஏற்படுத்தக்கூடும் என்றும், இரு நாடுகளின் வணிகச் செலவுகள் மற்றும் பொருட்களின் விலைகளில் தாக்கத்தை ஏற்படுத்தும் என பொருளாதார நிபுணர்கள் எச்சரித்துள்ளனர்.








