சொறிக்கல்முனை நாவிதன்வெளி பிரதே சபைக்கு உட்பட்ட 1.60 கிலோ மீற்றர் தூரம் கொண்ட தேவாலய வீதியின் ஒரு பகுதி போக்குவரத்துக்கு உகந்ததற்ற வீதியாக காணப்படுவதால் இவ்வீதியால் போக்குவரத்து செய்வோர் மிகவும் அசௌரியங்களுக்கு உள்ளாகி வருவதாக பொது மக்கள் தங்கள் கவலயை தெரிவித்து வருகின்றனர்.
சுமார் ஐந்நூறுக்கு மேற்பட்ட குடும்பங்கள் இவ்வீதியை நாளாந்தம் பாவிக்கும் நிலை காணப்படுவதுடன் இவ்வீதியால் பாடசாலை பிள்ளைகள்- நாளாந்தம் ஆலயம் செல்வோர் மற்றும் அதிகமான வாகனங்கள் போக்குவரத்தில் ஈடுபடும் நிலை காணப்படுவதால் பழுதடைந்து காணப்படும் இவ்வீதியை புனரமைக்க வேண்டிய அவசியம் காணப்படுகின்றது.
இது தொடர்பாக ஏற்கனவே பலர் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு முறையீடு செய்யப்பட்டுள்ள போதும் தொடர்ந்து கவனிக்கப்படாத நிலை காணப்படுவதாகவும் கவலை தெரிவிக்கப்படுகின்றது.



ஆகவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இவிவீதியால் பயணம் செய்யும் மாணவர்கள்- மக்கள் நலன் கருதி பழுதடைந்து காணப்படும் இவ் தேவாலய வீதியை உடன் புனரமைப்பதற்கான நடவடிக்கையை எடுக்கப்பட்டுள்ளதா? இல்லை எனில் மேற்கொள்ள வேண்டும் என மக்கள் வேண்டுகோள் விடுக்கின்றனர்.








