தாழமுக்கம் காரணமாக தொடர்ந்து பெய்த கனமழையால் மட்டக்களப்பின் நகர் புறத்தை சூழவுள்ள பல பகுதிகள் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ன.
இருதயபுரம், ஊரணி, கல்லடி, மயிலம்பாவெளி, சின்னஉப்போடை, அமிர்தகழி, மாமாங்கம், கூழாவடி, புதூர் என மேலும் அதனை சூழவுள்ள பல தாழ் நில பகுதிகளில் வெள்ளத்தால் சூழ்ந்துள்ளன.
இந்த நிலையில் திருகோணமலை பிரதான வீதியான ஊரணி வீதி நீர் நிரம்பி காணப்படுவதனால், பஸ் போக்குவரத்து தடைப்பட்டுள்ளது. எனினும் அந்த வழி பஸ் பயணங்கள் புன்னைச்சோலை மற்றும் இருதயபுரம் ஆகிய உள் வீதிகளினூடாக மாற்றியமைக்கப்பட்டுள்ளது.
அதேசமயம் இவ்வாறான ஒரு வெள்ளம் சூழ்ந்த சம்பவம் 2010 ஆம் ஆண்டு
நடந்ததாகவும், அந்த பின் 14 வருடங்கள் கழிந்து மீண்டும் அதே போன்று ஒரு சம்பவம் இந்த வருடம் நடந்துள்ளதாகவும் பொது மகன் ஒருவர் கருத்து தெரிவித்தார்.