Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
மாவடிப்பள்ளி விபத்தில் இதுவரை 06 சடலங்கள் மீட்பு; மேலும் மூவர் அடித்துச்செல்லப்பட்டிருக்கலாம் என சந்தேகம்

மாவடிப்பள்ளி விபத்தில் இதுவரை 06 சடலங்கள் மீட்பு; மேலும் மூவர் அடித்துச்செல்லப்பட்டிருக்கலாம் என சந்தேகம்

2 years ago
in செய்திகள்

காரைதீவு மாவடிப்பள்ளி பகுதியில் உழவு இயந்திரம் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டு காணாமல் போனவர்களில் இதுவரை 06 சடலங்கள் (ஜனாஸாக்கள்) மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

காரைதீவு – மாவடிப்பள்ளி பகுதியில் உழவு இயந்திரத்தில் வீடு திரும்பிக்கொண்டிருந்த மதரஸா மாணவர்கள் உள்ளிட்ட பலர் வௌ்ளத்தில் சிக்கி காணாமல் போகியிருந்த நிலையில், நேற்று முன்தினம் மாலை மீட்புப் படையினரின் தேடுதல் நடவடிக்கையின்போது 5 மாணவர்கள் வெள்ளத்தில் இருந்து காப்பாற்றப்பட்டனர்.

நேற்று இருள் இரவு சூழ்ந்திருந்த போதிலும் மீட்புப் படையினரின் தேடுதல் நடவடிக்கை தொடர்ந்து இன்று (28) காலையும் தொடர்ந்தும் இடம்பெற்று வந்தது. அதன்போது இதுவரை மொத்தமாக 06 ஜனாஸாக்கள் மீட்புப்பணியாளர்களினால் மீட்கப்பட்டு, சம்மாந்துறை ஆதார வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

அதில் நிந்தவூர் காஷிபுல் உலூம் அறபுக் கல்லூரி மாணவர்களின் ஜனாசாவும், வாகன சாரதியின் ஜனாஸாவும் மீட்கப்பட்டது. மீட்புப்பணியாளர்களினால், வெள்ளத்தில் காணாமல் போனவர்களை தொடர்ந்தும் தேடும் நடவடிக்கை இடம்பெற்று வந்த நிலையில் இன்று (28) இரு சடலங்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன.

மத்ரஸா முடிந்து மாணவர்களும் உழவு இயந்திர சாரதி மற்றும் உதவியாளரும் பயணித்துக்கொண்டிருந்த தருணத்தில் உழவு இயந்திரம் வௌ்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டு இந்த விபத்து நடைபெற்றுள்ளது.

மீட்பு பணியின் போது விலையுயர்ந்த மோட்டார் சைக்கிள்கள் இரண்டும், உழவு இயந்திரமும் மீட்கப்பட்டதுடன், இதில் பயணித்தவர்கள் எத்தனை பேர், எத்தனை பேர் காணாமல் போனார்கள் என்பதை துல்லியமாக கூறமுடியாத நிலை உள்ளதாகவும், குறைந்தது இன்னும் 03 பேராவது வெள்ளத்தில் அள்ளுண்டு சென்றிருக்கலாம் என்றும் நம்பப்படுகிறது.

அதேசமயம் திடீர் மரண விசாரணை அதிகாரி அப்துல் ஹமீட் அல் ஜவாஹீர் மரண விசாரணைகளை மேற்கொண்டதுடன், பிரேத பரிசோதனைகள் முடிக்கப்பட்டு குடும்பத்தினரிடம் ஜனாஸாக்கள் கையளிக்கப்பட்டு வருகிறது.

Tags: Battinaathamnewssrilankanews

தொடர்புடையசெய்திகள்

மூதூர் – அறபாநகர் பாலத்தின் தற்காலிக புனரமைப்பு பணிகள் ஆரம்பம்!
செய்திகள்

மூதூர் – அறபாநகர் பாலத்தின் தற்காலிக புனரமைப்பு பணிகள் ஆரம்பம்!

August 1, 2026
கற்பிட்டியில் சட்டவிரோதமாக சங்கு பதுக்கிய இருவர் கைது!
செய்திகள்

கற்பிட்டியில் சட்டவிரோதமாக சங்கு பதுக்கிய இருவர் கைது!

August 1, 2026
மீன்பிடிக்க சென்றவர் காட்டு யானைத் தாக்கி பலி!
செய்திகள்

மீன்பிடிக்க சென்றவர் காட்டு யானைத் தாக்கி பலி!

August 1, 2026
சாய்ந்தமருதில் பிரபல உணவகத்தில் பாரிய தீ விபத்து; தீயணைப்பு சேவை தாமதம் என மக்கள் குற்றச்சாட்டு!
செய்திகள்

சாய்ந்தமருதில் பிரபல உணவகத்தில் பாரிய தீ விபத்து; தீயணைப்பு சேவை தாமதம் என மக்கள் குற்றச்சாட்டு!

August 1, 2026
மின்னல் தாக்கிய சில நொடிகளில் தீப்பிடித்த வீடு
செய்திகள்

மின்னல் தாக்கிய சில நொடிகளில் தீப்பிடித்த வீடு

August 1, 2026
“சாரை பாம்புக்கு மண்ணெண்ணெய் ஊற்றினால் பதறுவது போல எதிர்க்கட்சிகள் செயற்படுகின்றன”; எம்.பி. கந்தசாமி பிரபு
செய்திகள்

“சாரை பாம்புக்கு மண்ணெண்ணெய் ஊற்றினால் பதறுவது போல எதிர்க்கட்சிகள் செயற்படுகின்றன”; எம்.பி. கந்தசாமி பிரபு

August 1, 2026
Next Post
உயர்தரப் பரீட்சை மேலும் மூன்று நாட்கள் பிற்போடப்பட்டது

உயர்தரப் பரீட்சை மேலும் மூன்று நாட்கள் பிற்போடப்பட்டது

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு